
கலவரத்தைத் தூண்டும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் செயல்படுவதாக கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் உண்ணும் போராட்டம் நடைபெற்றது.
ஆண்டாளை அவதூறாக பேசியதாக வைரமுத்துவிற்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜம் பல்வேறு கட்டங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜீயரின் இந்த நடவடிக்கை, தமிழர்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் போராட்டம் மேற்கொண்டனர்.
அரசின் தவறான திட்டங்களால், பாதிக்கப்படும் போது அவற்றிலிருந்து பொதுமக்களை திசை திருப்பவே ஜீயர் போராட்ட நாடகம் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.