சனி, 31 மார்ச், 2018

பிரதமர் மோடியை கிண்டலாக விமர்சித்த ராகுல் காந்தி March 30, 2018

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகம் ஆறுதல் தரும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்துள்ளார். 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் வெளியான நிலையில், அந்த பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Exam Warriors புத்தகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ள பிரதமர் மோடி, அதன் இரண்டாவது பாகத்தில், கேள்வித்தாள் வெளியானதால் எதிர்காலத்தை இழந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மனஅழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து விளக்கமாக புத்தகம் எழுதுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானதை கண்டித்து டெல்லி, லூதியானா உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய கல்வி தேர்வு வாரியத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

கேள்வித்தாள் விவகாரத்தில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, டெல்லியில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் வீட்டுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துவரும் ஹெலிகாப்டர் சுற்றுலா! March 30, 2018

பொள்ளாச்சியின் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளை, சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்துசென்று, பார்த்து ரசித்து வருகின்றனர். 

தமிழகத்தின் தென்னை நகரம் என்று வர்ணிக்கப்படும் பொள்ளாச்சி அருகே, வால்பாறை, டாப்சிலிப், ஆழியார் அணை உள்ளிட்ட இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 

இவற்றை கண்டு ரசிப்பதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஹெலிகாப்டரில் சென்று இயற்கை காட்சிகளை கண்டுரசிக்கும் வசதியை, தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, பொள்ளாச்சி அருகே உள்ள நாமூசுங்கம் தனியார் கல்லூரியில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 

சுமார் 10 நிமிடங்கள், 15 கிலோ மீட்டர் தொலைவு வரை ஹெலிகாப்டரில் பறந்து செல்ல, ஒரு நபருக்கு 4,199 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில், 6 பேர் பயணிக்க முடியும். இந்தப் புதிய வசதி காரணமாக, பொள்ளாச்சியில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 

ஹெலிகாப்டரில் பறந்தபடி, இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்கும் வசதி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

பதவி விலகாததால் அதிமுக எம்பிக்கு எலி மருந்து அனுப்பிய இளைஞர் March 30, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு இளைஞர் ஒருவர் எலி மருந்து அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால். தற்கொலை கொள்வோம் என அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களைவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து  கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இளைஞர் பெரியார் மணி என்பவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  மகேந்திரனுக்கு கொரியர் மூலம் எலி மருந்து அனுப்பி உள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 30 மார்ச், 2018

முபாஹலா அழைப் -அல்தாஃபி Vs TNTJ


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்தாஃபி இன்று 29.03.18 வியாழக்கிழமை
கீழ்கண்ட மின்னஞ்சலை தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
அவரது மெயிலும்,
அதற்கான ஜமாஅத்தின் பதிலும் கீழே வெளியிடப்பட்டுள்ளது.
அல்தாஃபி மெயில்:
அஸ்ஸலாமு அலைக்கும்
என் மீது நீங்கள்கூறிவரும்அவதூறுகளுக்கு 27.3.18
அன்று முபாஹலாசெய்ய வருமாறுஉங்களை
நான்அழைத்திருந்தேன்.
அதற்கு நீங்கள்வரவில்லை.
அதன் பிறகு நீங்கள்எனக்கு விடுத்தமுபாஹலா அழைப்பைநான் ஏற்றுக்கொண்டேன்.
ஏப்ரல் 1 ஆம் தேதி இதை நடத்திக் கொள்ளலாம்என இரு தரப்பும் ஒத்துக்கொண்டோம்.
அதற்கு தேவையானஏற்பாடுகளைச்செய்யவும்முபாஹலாவின் வாசகம்உள்ளிட்ட அனைத்துவிஷயங்களையும்பேசிக் கொள்ளவும் இரண்டு அல்லது மூன்றுபேரையும் அவர்களின்தொடர்பு எண்களையும்வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது தொடர்புக்கு : 8667375739அப்துல்லாஹ்
இப்படிக்கு
P.M அல்தாஃபி
----------------
மேற்கண்ட மெயிலுக்கு நமது ஜமாஅத்தின் பதில்:
அனைத்துக்கும் முபாஹலா செய்யும் அழைப்பை நீங்கள் 28.3.2018 அன்று விட்டீர்கள்.
அதே நாளில் அந்த அறைகூவலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
இனி நமக்கிடையே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை; நேரடி முபாஹலா மட்டுமே என்று அறிவித்திருந்தோம்.
உங்கள் மீது நாங்கள் சுமத்தும் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ஒவ்வொன்றாகக் கூறி நாங்கள் முபாஹலா செய்வோம்.
அவற்றை மறுத்து நீங்கள் முபாஹலா செய்ய வேண்டும்.
பின்னர் எங்கள் மீது நீங்கள் சுமத்தும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒவ்வொன்றாகக் கூறி நீங்கள் முபாஹலா செய்யுங்கள்.
அவற்றை மறுத்து நாங்கள் முபாஹலா செய்வோம்.
இதில் பேச்சு வார்த்தைக்கு எந்தத் தேவையுமில்லை, எல்லாம் முடிந்து விட்டது.
27.3.2018 அன்று ரவி மினி மஹாலில் இருந்து நீங்கள் நேரலை செய்த போது என்னென்ன ஏற்பாடுகள் செய்திருந்தீர்களோ அதுவே போதுமானது.
நீங்கள் அழைத்த அதே ரவி மினி மஹாலில் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10.30மணிக்கு சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்....
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி மின் வழிச் சீட்டுக்கு விலக்கு! March 30, 2018

Image



தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல இ-வே பில் (E-Way bill) என்னும் ஒப்புதல் படிவத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இ-வே பில் (E-Way bill) என்னும் ஒப்புதல் படிவம் எடுக்கப்பட்டு வந்தது. 

இந்த ஒப்புதல் சீட்டிற்கு தமிழக அரசு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், மண்ணெண்ணெய், முத்துக்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுக்கள் ஆகிய பொருட்களுக்கு இ-வே பில் (E-Way bill) எடுக்க வேண்டிய அவசியமில்லை என கூறப்படுகிறது. 

அதேபோன்று ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் இந்த ஒப்புகை சீட்டு எடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ரூ.50,000-க்கும் மேல் பெருமானமுள்ள பொருட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

​தேர்தல் அதிகாரியை காணவில்லை என திமுக புகார்..! March 30, 2018

Image

கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் திமுகவினர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், திமுகவை சேர்ந்த 11 பேர் கடந்த 26ம் தேதி நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு அளித்ததாகவும், அதற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வேட்பாளர் பட்டியலை ஒட்டவில்லை என்றும், தேர்தல் அதிகாரியையும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் பாலிநாயனப் பள்ளி, எமக்கல் நத்தம் கிராமங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகளை காணவில்லை என பருகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றி நிச்சயம்



வியாழன், 29 மார்ச், 2018

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்! March 29, 2018

ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பகிர்ந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, இந்தியா பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம் இந்திய தேர்தலில் முடிவுகளை மாற்றுவதற்கு அந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கம்பர்க் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக பல்வேறு நாடுகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளன. 

இதனிடையே இவ்விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ் March 29, 2018

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க  உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு, புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக, மத்திய அரசு அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விட சிறந்த உதாரணம் வேறு எதுவுமில்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பது நன்றாகத் தெரிந்தும், அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட  தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்றும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  காவிரிப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை,  தமிழக மக்கள் 
மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் தொடக்கம்! March 29, 2018

Image

முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகள் சவாரி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் 22 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானை சவாரி, ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த யானைகள் பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அவற்றிற்கு ஓய்வு அளித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த புத்துணர்வு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தொடங்கி நேற்று மாலை வரை 48 நாட்கள் நடைபெற்றது. புத்துணர்வு முகாமில் யானைகள் கலந்து கொண்டதால், சுற்றுலா பயணிகளுக்காக நடத்தபட்டு வந்த யானை சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

புத்துணர்வு முகாம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து வளர்ப்பு முகாமில் இருந்த கும்கி யானைகள் ரோந்து செல்லுதல், காட்டு யானைகளை விரட்டுதல், களை செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை இன்று முதல் செய்ய தொடங்கி உள்ளன.

குறிப்பாக யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் குறைந்த சுற்றுலா பயணிகளே யானை சவாரி சென்று மகிழ்ந்தனர். இரண்டு கும்கி யானைகள் மட்டும் சவாரிக்கு பயன்படுத்தபட்டன.

29/03/2018 :boycott the media

Image may contain: one or more people and text

ராமர் பயங்கர ஆயுதங்களுடன் பேரனி நடத்த சொன்னாரா ? மோடியிடம் கேள்வி கேட்டார்... - #மம்தா_பேனர்ஜி ( மேற்கு வங்காள முதலமைச்சர்)

ராமர் பயங்கர ஆயுதங்களுடன் பேரனி நடத்த சொன்னாரா ?
மோடியிடம் கேள்வி கேட்டார்...
#மம்தா_பேனர்ஜி ( மேற்கு வங்காள முதலமைச்சர்)

Image may contain: 2 people, beard

அடிமையாக உள்ளவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்” - கி.வீரமணி March 29, 2018

Image

அடிமையாக உள்ளவர்கள் தான், தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என, அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனின் கருத்தை, திராவிடர் கழகத்தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.

தஞ்சை அருளானந்தர் நகரில் உள்ள மறைந்த நடராஜன் இல்லத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்றனர். பின்னர் சசிகலாவை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரமணி, கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு பிச்சை கேட்பது போல், தற்கொலை செய்து கொள்வதாக கூறுவது விரும்பத்தக்கது அல்ல என கூறினார். 

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தற்போது இதுபோன்ற வீரம் தான் அவசியம் என்றும் வீரமணி தெரிவித்தார். மாறாக அடிமையாக உள்ளவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

புதுவை சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்! March 28, 2018

Image

நியமன எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி சட்டப் பேரவை சபாநாயகர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை, நியமன உறுப்பினர்களாக, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். 

இதை புதுவை அரசு ஏற்காத நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், அவர்கள் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க வந்த போது சட்டப் பேரவைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு வரும் திங்களன்று  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு கணிதம், 12ஆம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கு மறுதேர்வு! March 28, 2018

Image
கேள்வித்தாள் வெளியான புகாரை தொடர்ந்து, 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.  

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 

பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பொருளாதார பாடத்துக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதாக புகார் எழுந்தது. 

சி.பி.எஸ்.இ இப்புகாரை மறுத்து வந்த நிலையில்,12ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

இதே போல்,10ம் வகுப்பு கணிதப் பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும், ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. 

இதனிடையே, வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டறிந்த பிரதமர், கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

"ஸ்கீம்" என்ற வார்த்தையால் முடங்கியிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் March 28, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில், "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவை தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது. 

ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், மத்திய அரசு அதிகாரிகள், அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் அது தொடர்பாக ஆலோசித்தனர். 

அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா என விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி அளித்தார். இதையடுத்து, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது. 

புதன், 28 மார்ச், 2018

want to live n let live peacefully



இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க.. ??.."

 காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். 
அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..
??.."
கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை...
பகிரலாமே.....
நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச்சீரழிகிறோம்


thanks FB : Selvam

இவர்களை விட்டு விலகும்படி மதம் மாறியவர்களை கேட்டுக்கொள்கிறேன்

தமிழா வணக்கம்
பாரசீக நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனர்களின் இந்து மதத்தையும் அட்டூழியத்தையும் ஓரு தமிழன் தோலுரித்து காட்டியுள்ளான் இங்கு இந்து மதத்திற்கு மாறியவர்கள் பார்ப்பனியர்களின் வப்பாட்டிக்கு பிறந்தவர்களாம் வாப்பாட்டிக்கு பிறந்தவர்களை வீட்டிற்குள் விடுவதில்லை இந்து மதத்திற்கு மாறியவர்களே அடிமை வேலை செய்கிறார்களே கொஞ்சம் நிதானித்து பாருங்கள் நம்மை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் திட்டும்படி உசுபேத்தி விடும் இவர்களை விட்டு விலகும்படி மதம் மாறியவர்களை கேட்டுக்கொள்கிறேன்

Image may contain: text


Image may contain: text
Image may contain: text




பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் தேதி நீட்டிப்பு! March 28, 2018

Image

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளதா என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால், ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி, ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

நீச்சலில் சாதனை படைக்க தமிழகத்தை தேர்ந்தெடுக்கும் வீரர்கள்..! March 28, 2018

Image

நீச்சல் சாதனை மூலம் உலகம் முழுவதும் பேசப் பட வேண்டும் என்ற கனவு கொண்டவர்களின் முதல் தேர்வாக உள்ளது தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாக் ஜலசந்தி. நீச்சல் வீரர்கள் இந்த பாக் ஜலசந்தியை தங்கள் சாதனைக் களமாக தேர்வு செய்வது ஏன். அதில் நீந்துவதில் உள்ள சவால்கள் என்ன என்ன?

கடலில் நீந்தி நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருப்பவர்கள் தங்கள் சாதனைகளை நிறைவேற்ற உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் உள்ள ஏழு கால்வாய்களில் ஒன்றிணைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்தியா இலங்கை இடையே உள்ள பாக்ஜலசந்தி கடற்பகுதி, ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டல் மற்றும் சுருக்குலீக், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜலசந்தி, இங்கிலாந்தில் உள்ள இங்லீஸ் கால்வாய், அமெரிக்காவில் உள்ள காட்டிலினா தீவு மற்றும் மும்பையில் இருக்கும் அலிபாய் கடற்பகுதி என ஏழு கடற் பகுதிகள் நீச்சல் வீரர்களின் கனவுகள் மையம் கொள்ளும் இடமாக உள்ளன. இதில் அதிக தூரம் கொண்ட கடல் கால்வாய்பகுதி தனுஷ்கோடி, தலைமன்னார் இடையேயான 33 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாக்ஜலசந்தியாகும். இந்த கடல் பகுதிதான் நீச்சல் வீரர்களுக்கு அதிக சவாலை கொடுக்கும் கடல் கால்வாய் பகுதி. மற்ற நாடுகளில் இருக்கும் கடல் கால்வாய்கள்  ஒரே கடலை கொண்டுள்ள கடற்பகுதி ஆகும். ஆனால் பாக் ஜலசந்தி இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சுற்றிலும் கொண்டுள்ளது. அதனால் தான் நீச்சல் வீரர்களுக்கு பாக் ஜலசந்தி அதிக சவாலை கொடுக்கிறது. 

நீச்சல் வீரர்கள் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியினை கடப்பதற்கு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களை மட்டுமே தான் தேர்வு செய்கின்றர்கள். காரணம் இந்த மாதத்தில் மட்டும் தான் காற்றின் வேகம், கடலின் நீரோட்டம் மற்றும் கடல் சீற்றம் குறைவாகக் காணப்படும். பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நீச்சல் வீரர்கள் நடுக்கடலில் நீந்தி வரும்போது சந்திக்கும் சவால்களில் முக்கியமானது கடல் நீரோட்டம் மற்றும் ஜெல்லி மீன்கள். பாக் ஜலசந்தி கடலில் ஜெல்லி மீன்களும் மற்ற கடற்பகுதியில் ஷார்க் உள்ளிட்ட மீன்களும் நீச்சல் வீரர்களுக்கு இணையாக அவர்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு அச்சுறுத்தும். ஜெல்லி  மற்றும் ஷார்க் மீன்களில் அதிக நீளம் மற்றும் அதிக எடை கொண்ட விஷதன்மை கொண்ட மீன்கள் கடித்தாலும், அடித்தாலும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க கூடிய அபாயமும் உள்ளது. பாக் ஜலசந்தியை கடக்கும் வீரர்கள்  அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டபின்  இந்திய - இலங்கை என இரு நாட்டிலும்  உள்ள கடற்படை, வெளியுறவுத்துறை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழுமையான அனுமதி பெற்று தங்கள் சாதனையை படைக்க கடலில் இறங்குகின்றனர்.

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியில் இதுவரை 14 முறை நீந்தி கடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பாக் ஜலசந்தியை நீந்தி கடப்பதில் அடுத்தடுத்து 3 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. கடந்த 24ம் தேதி  இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு 11 மணி 58 நிமிடங்களில் நீந்தி வந்து சென்னை மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு சாதனை படைத்த நிலையில் மறு நாளே அந்த சாதனையை முறியடித்தார் ஆந்திர காவலரான துளசி சைதன்யா, தலைமன்னார் தனுஷ்கோடி இடையேயான தூரத்தை 8 மணி நேரம் 25 நிமிடத்தில் அவர் கடந்தார். 

இந்நிலையில், தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 10 நீச்சல் வீரர்கள் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தியபடி வந்து பகல் 1.50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாக் ஜல சந்தியை கடக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த முரளிதரன். 1960ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டும் வரை பாக் ஜலசந்தியை நீந்தி கடப்பதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் 12 வயதிலேயே தலைமன்னார் தனுஷ்கோடியை நீந்திக் கடந்த குற்றாலீஸ்வரனின் சாதனை இன்றளவும் உலகை வியக்க வைத்து வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த குற்றாலீஸ்வரன் கடந்த 1994ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி உலகின் கவனத்தை பெருமளவு ஈர்த்தார். அதோடு நின்றுவிடாமல் உலகில் கடற்பகுதியில் உள்ள 7 முக்கிய கால்வாயிகளில் 6 கால்வாய்களை நீந்தி கடந்தவர் என்கிற பெருமையையும் குற்றாலீஸ்வரன் பெற்றார். சவால்கள் நிறைந்த பாக் ஜலசந்தியில் சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற கனவுடன் இன்னும் பல நீச்சல் வீரர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 27 மார்ச், 2018

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் #அய்யாகண்ணுஅவர்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
இன்று காலை #பள்ளபட்டிக்கு வருகை தந்த அய்யாகண்ணு அவர்களை திருச்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் #சுஹைப் அவர்கள் சந்தித்து பொன்னாடை போற்றி கெளரவித்தார்.தொகுதி தலைவர் #மிர்ஜா அவர்களும், தொகுதி செயலாளர் #காஜா அவர்களும் உடனிருந்தனர்.
மேலும் அவருடைய பிரச்சாரத்திற்கு தங்களது பங்களிப்பிற்காக வாகன பெட்ரோல் பயன்பாட்டிற்காக ரு.5000 நன்கொடையாக வழங்கப்பட்டு, உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவருடைய கோரிக்கைகள் வெற்றியடையவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கவும் SDPI கட்சி #திருச்சி மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

Image may contain: 6 people, people smiling, people standing and text

வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...

For those cribbing that not enough is being done against karunya University here is your chance to contribute too.. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...

Image may contain: 1 person, standing, outdoor and nature
============================================
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோக மையத்தின் யானைகளின் வாழ்விடங்களை பாதிக்கின்ற கட்டிடங்களை எதிர்த்தும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நில அபகரிப்புக்கு எதிராகவும் மிக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில், காருன்யா பல்கலை கழகம் அதன் சட்ட விரோத கட்டுமானங்கள் மீது, ஏற்கனவே இருக்கும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கை மதிக்காமலும் தொடர்ந்து வருவாய கோட்டச்சியர் அவர்கள் உத்திரவை மதிக்காமலும் வல்லத்து ஓடையை சிதைத்து தனது கான்கிரட் மதில்களை எழுப்பி வருகிறது. இதன மூலம் பழங்குடி மக்கள் பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை இழப்பதுடன் யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் சிக்கி போராடும் சூழல் இருக்கிறது. காருன்யா பல்கலைகழகத்தின் இந்த போக்கை தடுத்த நிறுத்த வேண்டியது அவசியமாகும். எனவே காரூன்யா கல்வி நிறுவனங்களின் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில நடக்கும் வழக்கில் இனைத்துக் கொள்ள வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே இருக்கும் இந்த வழக்கிற்கும் புதிதாக தொடரப்படும் வழக்கிற்கும் நிதி தேவைப்படுகிறது. மிகப்பெரிய கார்பரே ஆண்மிக கல்வி நிறுவனங்களை எதிர்ப்பதற்கு தங்கள் ஆதரவும் தேவைப்படுகிறது.
எனவே தற்போது ரூபாய்- 75,000 மட்டும் வழக்கு செலவுகளுக்காக தேவை வங்கி கணக்கு விபரம்/
" Vellingiri Hill Tribal Protection Society,
Account Number== 1032101043986, savings bank account
Canara Bank, Alandurai, Coimbatore-641101,
IFSC CODE : CNRB0001032. "
(வெள்ளியங்கிரி சங்கத்தினரின் கோரிக்கையின் பேரில் பதிவு செய்யப்படுகிறது.நிதி அளிக்கும் நண்பர்களின் விபரம் வெளியிடப்படும்.)
Contact No -9500870572

ஓ.என்.ஜி.சி எரிவாயு கிணறு முற்றுகை: திருமாவளவன் உட்பட பலர் கைது March 27, 2018

Image

தஞ்சையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு கிணற்றை முற்றுகையிட முயன்ற திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், தஞ்சை-திருவாரூர் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், 31 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்டி எரிவாயு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. 

பின்னர், அம்மாபேட்டையில் இருந்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பேரணியாக சென்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினத்தின் எரிவாயு கிணற்றை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இஸ்லாத்தில் மறுபிறவி உண்டா?


இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம்
















டெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக் மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃபுபோர்டு தலைவர்கள் மூத்த அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக நாமும் கலந்து கொண்டோம். சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியயிலிருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.
மூன்று மாதிரி தொகுதிகளில் நீக்கப்பட்டவரின் பட்டியலை விலாசத்துடன் அளித்ததை மாநில அரசு அதிகாரிகளே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெங்களுரு மையத்திலுள்ள அமைச்சர் ரோஷன் பேக் வெற்றி பெற்ற சிவாஜி நகர் தொகுதியில் மட்டும் 8000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல் தெரிவித்ததை அவர் முதலில் மறுத்தாலும் ஒரே நாளில் ஆய்வு செய்து அறிவிப்பதாகக் கூறினார். ஆய்விற்குப் பின் மறுநாளே அத்தகவல் உண்மை என்று அவர் அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இவரின் வீடியோ கிளிப் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியை சரி செய்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மறு பதிவு செய்ய அதிவேகமான செயல் திட்டங்கள் கர்நாடக அரசும், ஆர்வலர்களும் மேற் கொண்டுள்ள நிலையிலும் 3 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மாநில அளவில் தேர்தலுக்கு முன் பதிவு செய்ய முடியும் என்று அறிய முடிகிறது.
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவலும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏறக்குறைய 10 – 12 இலட்சம் முஸ்லிம் வாக்களார் நீக்கப்பட்டியிருக்கலாம் என்பதை தோராயமாக கணக்கிட்டாலும்,
மூன்று தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கணிணி மூலம் நீக்கப் பட்டியல் சில நாட்களில் அளிக்க கோரியுள்ளேன்.
பாராளுமன்ற தேர்தல் ஒரு வருடம் இருப்பதால் பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் சமூக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து இந்த சதியை
முறியடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் விரைவில் கூட்டபடும்.
(மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்)
https://youtu.be/hv2iCvg5X5g

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.

குறுகிய சாலை

இச்சாலை மிகவும் குறுகிய சாலை.இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம்.காரணம் அச்சாலையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் இரும்பு சாமான்கள் விற்கும் கடை உரிமையாளர் முதல் தொழிலாளிகள் வரை சாலை ஓரத்தில் வெங்காய மூட்டைகளை அடுக்கி வைப்பார்கள்.சாலை ஓரத்திலே வெங்காயத்தை கொட்டி பரப்பி விடுவார்கள்.இரும்பு கடை வைத்திருபவர்கள் அதற்கு மேல் சாலை நடுவே வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏத்துவார்கள்.அதும் காலை நேரத்தில் தான்,வருகின்ற லோடு சரக்குகளையும் இறக்குவர்கள்.
இப்படி தன் சுய லாபத்திற்காக, மக்களை பற்றி சிந்திக்காமலும் அவர்கள் செய்யும் செயல்பாடுகள் ஒரு விதமான கடும் எரிச்சலை உண்டாக்கும்.
ஆக இது போன்ற போக்குவரத்து நெரிசலை தடுக்க, விதிமுறைகளுக்கு உட்பட்ட படி கடை நடத்த கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.

பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன.

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அன்பிறகினிய கொள்கை சொந்தங்களே!
தற்பொழுது ஊடகங்கள் வாயிலாக பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன. இவைகளைக் காணும் பொழுது மனம் பெரும் வேதனையடைகின்றது. சொல்ல முடியாத துக்கம் ஏற்படுகின்றது. கண்கள் கண்ணீரை வடிக்கின்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது தனி ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களாலோ வளர்க்கப்பட்டது அல்லது உருவாக்கப்படடது அல்ல. இதற்காக பல சகோதரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். பல ஆயிரக்கணக்காணோர் சிறை சென்றுள்ளார்கள். தற்பொழுது நாம் ஒரு நாள் பகல் பொழுது மட்டும் சிறை செல்வது போல் அல்ல. பல நாட்கள், பல மாதங்கள், 2004 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட FIR னால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு இன்று வரை நடந்துவருகின்றது. கோர்ட்டும், வழக்கறிஞர் அலுவலகமும் என்று அழைந்து வருகின்றனர். இந்த ஜமாஅத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஏகத்துவ சகோதரனுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம் சகோதரர்கள் பலர் இத்தனை ஆண்டுகள் மேற்கூறப்பட்ட தியாகங்களால் வளர்த்த ஜமாஅத்தை இஸ்லாத்தின் எதிரிகள் மற்றும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் பலன் பெரும் வகையில் எவ்வளவு கீழ் இறங்கி தரம் தாழ்ந்து தங்களது வெறுப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மாநில நிர்வாகிகள் யாரும், இறைத்தூதர்களோ அல்லது மலக்குகளோ அல்ல. மலத்தை தன் வயிற்றில் சுமந்துவரும் சாதாரண மனிதர்கள் தான். ஆரம்ப மனிதனே தவறு செய்தவன்தான். (தவறுசெயதார்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை) ஆனால் பல சகோதரர்கள் இதனை அறியாமல் கோபத்தினால் ஏற்படக்கூடிய வசைகளையும், மற்றவர்கள் செய்யும் அவதூறுகளையும் ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் நாம் ஒரு கருத்தை பொது வெளியில் கொண்டு செல்லவேண்டுமானால், நாளிதழ், தொலைகாட்சி, வானோலி போன்றவைகளின் மூலம் தான் கொண்டு செல்ல முடியும். அதற்கு ஏற்படும் செலவு லட்சக்கணக்கில் வரும். ஆனால் இன்று அவ்வாறல்ல. எந்த செலவும் இன்றி தான் விரும்பியதை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்ல முடிகின்றது.
இந்த வசதியை நன்மைக்கு பயன் படுத்தாமல், தமிழகத்தில் ஏகத்துவத்தின் கோட்டையாகத் திகழ்கின்ற ஜமாஅத்தின் மீது பழி சுமத்தி அழிக்க நினைக்கின்றார்கள். இந்த ஜமாஅத் அழிந்து போனால் வேறு நல்ல ஜமாஅத் இருக்கின்றதா? அல்லது புதிதாக விலக்கப்பட்டவர்களும், அதிர்ப்தியாளர்களும் ஒன்று சேர்ந்த ஒரு நல்ல ஜமாஅத்தை உருவாக்க முடியுமா? அவ்வாறு கூறி உருவாக்கியவர்களின் நிலை தற்பொழுது என்ன? என்பது நமக்குத் தெரியாதா? கண் முன் இருப்பதைக் கட்டமைக்க வாருங்கள்.
நீங்கள் பதிவிடும் தகவல்கள் ஜமாஅத்தின் வளர்சச்சிக்கு உதவுமானால் நன்றாகப் பரப்புங்கள். அந்த பதிவு ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விலைக்குமனால் அல்லாவிற்காக அந்த பதிவைத் தவிர்த்துவிடுங்கள். சில நேரங்களில் நாம் நல்லது என்று நினைப்பது உண்மையில் தவறாத் இருக்கலாம். ஒரு வேளை அவை உண்மையாகவும் இருக்கலாம். பலர் கூடி தவறு என்று தீர்ப்பும் கூறலாம். அல்லாஹ் ஒருவன் தான் தீர்ப்பளிப்பதில் உண்மையாளன். மனிதன் தவறு செய்பவன் தான். இதனை உணராமல் இந்த ஜமாஅத்தை உருவாக்கப்பாடு பட்டவர்களும், நேரத்தையும், பொருளையும், குடும்பத்தையும் தியாகம் செய்தவர்களும் தங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் பொழுது அனைத்தையும் மறந்து பொது வெளியில் நாற்றத்தை வீசுகின்றார்கள். நம்மை இந்த ஜமாஅத்தில் இருந்து யாரும் விரட்ட முடியாது. நாம் உருவாக்கிய ஜமாஅத். மனிதன் என்ற வகையில் பாதிப்பு ஏற்படும் பொழுது கோபமும், விரக்தியும், சோர்வும் ஏற்படுவது இயல்பு. அந்த கோபத்தை சில மாதங்கள் அடிக்கி வைக்கமுடியாதா? மேடைகள் தோறும் பொருமை பொருமை என்று மக்களுக்கு பயான் செய்கின்றோமே! அந்த பொருமை நமக்கு இல்லையா? எத்தனை பேருக்கு நாம் பஞ்சாயத்து செய்திருக்கின்றோம். அது நமக்கு இல்லையா? நமக்கு ஒரு பாதிப்பு என்றால் குமுறி எழுகின்றோம். அதைவிட மோசமான பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டால் பொருமையாக இருங்கள், வெற்றி நிச்சயம் உங்களுக்குத்தான் என்று அறிவுரை கூறுகின்றோம். பதிவியும் மேடையும் கிடைக்காவிட்டால் என்ன? பொருத்துக்கொள்ள முடியாதா? ஒவ்வொரு விநாடியும் ஏகத்துவம் ஏகத்துவம் என்று மேடை போட்டுபிரச்சாரம் செய்கின்றோமே இதுதான் ஏகத்துவமா?
நாம் கூடி எதைச் செய்தோமோ அதைப் பொது வெளியில் அம்பலப்படுத்தி நாசமாக்குகின்றோம். நம் கண் முன் எதிரே நடக்கும் தவறான முடிவுகளை முகஸ்துதிக்காகவும் தக்லீது செய்தும் ஏற்கின்றோம். எத்தனை சகோதரர்கள் மீது நமக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று எடுக்கப்பட்டது. அப்பொழுது எல்லாம் வாயைக்கூட திறக்காமல் மவுனம் காத்து ஏற்றுக்கொண்டோமே!
அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே! இந்த இயக்கம் நமது இயக்கம்! நம்மால் உருவாக்கப்படட இயக்கம். சில சமயங்களில் பாதிப்புகள் எற்படும் பொழுது பொருமை காத்து மவுனம் சாதியுங்கள். நிச்சயம் உங்கள் ஜமாஅத் உங்களை நிரந்தரமாக நீக்க முடியாது? எதற்கும் ஒரு எல்லை உண்டு. விரைவில் நீங்கள் செய்த தியாகமும், சேவையும், ஒத்துழைப்பும் நிச்சயம் நினைவு கூறப்படும். தானாக முன்வந்து ஜமாஅத் உங்களை அரவணைக்கும். ஆனால் மனிதன் பொருமை இல்லாதவனாக இருக்கின்றான். இந்நாள் வரை சேமித்து வைத்திருந்த அனைத்தையும் ஒரு பதிவில் அழித்துவிடுகின்றான். எந்த அளவிற்கு தரம் தாழ முடியுமோ அதைவிட கீழ் இறங்கி நாற்றத்தை அள்ளி வீசுகின்றான். எனக்கு நினைவிற்கு வருகின்றது அன்று ஒருவர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சொற்றொடரைக் கூறினார். (இந்த ஜமாஅத்தை விட்டு யார் செல்கின்றானோ அவன் தருதலையாவான். நாசமாகப் போவான். இதற்கு தானும் விதிவிலக்கு அல்ல என்று) இதனை அனுபவப் பூர்வமாகப் பார்த்து அனுபவித்து வருகின்றோம்.
தயவு செய்து உங்களிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள். நீங்கள் வீசும் வார்த்தைகள் இனி மேல் நாம் ஒன்று கூட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. பிரிந்தவர்கள் ஒன்று கூட வேண்டும். நாம் செய்த தவரை உணர வேண்டும். உணர்ந்து அதற்கு ஏற்ற பரிகாரத்தைத் தேடவேண்டும். இதனால் நாம் கீழ் நிலைக்குப் பொவது இல்லை. இறைவனுக்காக இதனைச் செய்தால் நிச்சயம் இரு உலகிலும் இதற்குறிய பலன் உண்டு.
இறுதியா நினைவுபடுத்துகின்றேன். இந்த ஜமாஅத் நம்முடையது. நாம் வளர்த்த ஜமாஅத். எவையும் நிரந்தரமல்ல. அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதுவரை காத்திருங்கள். காலம் கனியும்.
- அப்துல் ஹமீது (பனைக்குளம்) மூத்த உறுப்பினர்

திங்கள், 26 மார்ச், 2018

New Cutting machine



Note: This just shared new machine tools information

​ஒரு கப் டீயின் விலை இவ்வளவா? - அதிர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர்! March 25, 2018

Image

சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ மற்றும் காபியின் விலையைக் கேட்டு, தான் அதிர்ந்து போனதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட் செய்துள்ளார். 

இதுகுறித்து தமது ட்விட்டர் பதிவில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி ஷாப் ஒன்றில், டீ ஆர்டர் செய்ததாகவும், சூடான நீர் மற்றும் ஒரு டீ பேக் ஒன்றை வழங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் விலை 135 ரூபாய் என்றும், இதைக் கேட்டவுடன் தாம் அதிர்ந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனால், தாம் ஆர்டர் செய்த டீ வேண்டாம் என மறுத்து, காபியின் விலையை விசாரித்தபோது அதன் விலை 180 ரூபாய் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 
இதனை யார் தான் வாங்குவார்கள் என்று தான் கடைக்காரரிடம் வினவியதாகவும், அதற்கு பலபேர் வாங்கி செல்வதாக பதில் வந்ததாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். 
 
At Chennai Airport Coffee Day I asked for tea. Offered hot water and tea bag, price Rs 135. Horrified, I declined. Was I right or wrong?
ப.சிதம்பரம் பதிவிட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருவதுடன், அதிகளவு பகிர்ந்தும் வருகின்றனர்.