
2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி முதல் மன்னார் வளைகுடா வரை ஸ்குவாலி எனப்படும் திடீர் காற்று மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும், கடற்பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார்.