சனி, 10 மார்ச், 2018

தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, 1 லட்சம் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை! March 10, 2018

இலங்கையில் தீ வைத்து எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Image

கோபிசெட்டிபாளையத்தில், சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் பின்னர், 355 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு 6 கோடி ரூபாயும், மதுரை தமிழ்ச் சங்க நூலகத்திற்கு, 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், திருச்சியில் அறிவியல் நூலகம், சிவகங்கையில் தொல்லியல் நூலகம், தஞ்சையில் கலைஅறிவியல் நூலகம், கோவையில் வானவியல் நூலகம் ஆகியவை அமைக்கப்படும், என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

இலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Related Posts: