
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் கூறிள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே என்றார்.
தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளதாகக் கூறிய சுபாஷ் சந்திர போஸ், அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.