எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புக்கு 141 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ள கப்பல் நிறுவனங்கள், அதை 14 நாட்களில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே கடந்தாண்டு ஜனவரி மாதம் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் கசிந்து, கடலில் மாசு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உரிய இழப்பீடு கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் 141 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 14 நாட்களில் 141 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட்டனர்.