2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.