வெள்ளி, 16 மார்ச், 2018

வேலைக்காரன் திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்கள் March 16, 2018

வேலைக்காரன் திரைப்படத்தில் வருவது போல் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் தங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்பின் மூலம் பண்பலையை உருவாக்கி கடல் தாண்டி தங்கள் குரலை ஒலிக்க வைக்கின்றனர். 

சேலத்தைச் சேர்ந்த குட்டிப் பிரகாஷ் மற்றும் இர்பான் ஆகிய இருவருக்கும் ரேடியோ ஜாக்கியாக வேண்டுமென்பது கனவு. ஆனால் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், தங்களுக்கான வாய்ப்புகள் மூலம் தங்கள் குரலை காற்றில் பரவ விட்டிருக்கின்றனர். 

அவர்களே நிகழ்ச்சிகளை உருவாக்கி அதனை ஒலிப்பதிவு செய்து, வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து வருகின்றனர். திருச்சி மதுரை உள்ளிட்ட தமிழக பெருநகரங்கள் மட்டுமில்லாமல், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவர்களுடைய குரல் பரவி வருகிறது. 

Image

Related Posts: