ஞாயிறு, 18 மார்ச், 2018

செயற்கை கூடுகள் அமைத்து சிட்டு குருவிகளை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்! March 17, 2018

Image

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை கூடுகளை நீலகிரியில் அமைத்து ,  இயற்கை ஆர்வலர்கள் பாரமரித்து வருகின்றனர்.  

உதகை அரசு கலைக்கல்லூரியின் வனஉயிரியல் பேராசியர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து, உதகையின் பல்வேறு பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட செயற்கை கூடுகளை வைத்து ஆராய்ச்சி செய்து வருகினறனர்.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள கூடுகளில் வசித்து வரும் சிட்டுக் குருவிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களின் இத்துகைய செயல், நீலகிரி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.