சேலத்தில் நிலவிவரும் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெயில் காலத்தில் விற்கப்படும் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
கோடை காலம் ஆரம்பித்ததன் தொடக்கமாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே வெயில்வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.
சேலத்தில் பகல் நேரத்தில் காற்றில் ஈரப்பதம் குறைந்து அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்துவருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பான கடைகள் ஜஸ்கீரீம் நிலையம் உள்ளிட்ட கடைகளில் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சேலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கோடை காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென மருத்துவர்களும் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
இயற்கையான உணவுமுறையை கோடை காலங்களில் கடைபிடித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும் எனவும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறிவருகின்றனர்.