உத்திரப்பிரதேசத்தில் புல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அத்தொகுதியில் அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரத்தின் போது பேசிய யோகி, “ இந்த ஆண்டு ஹோலி வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. வெள்ளிக்கிழமை முஸ்லீம்கள் நமாஸ் செய்யும் நாள். ஆனால், வருடத்தில் 52 வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், ஒரு ஹோலி தான் வருகிறது என்று நான் கூறினேன். அதன் பிறகே ஹோலி சிறப்பாக கொண்டாடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களின் நமாஸ் நிகழ்ச்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
மேலும், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜக ஆட்சி அமைக்கும் நாள், வெகுதொலைவில் இல்லை என்று, தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சி 5ஆவது முறையாக தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், இந்த சரிவின் வேகம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதாகவும், விரைவில் அந்த மாநிலங்களில் இருந்தும் அக்கட்சி முற்றிலும் துடைத்து எரியப்படும் எனவும், யோகி ஆதித்யாநாத் சுட்டுக்காட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளை மக்கள் உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும், இதனால், பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.