செவ்வாய், 6 மார்ச், 2018

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஓரணியில் திரண்ட தமிழக எம்பிக்கள்! March 6, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தது. 

இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

இதனை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நேற்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திரண்ட தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

இதனிடையே, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts: