13 வயது சிறுவன் ஒருவன் ட்ரோன் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளான்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ஆர்யமன் வர்மா என்ற 13 வயது சிறுவன் ட்ரோன் விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளான். இந்த ட்ரோன் விமானத்தில் ஜிபிஎஸ் வசதி, கேமரா ஆகியவற்றை பொருத்திக் கொள்ள முடியும்.
இதனால் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் ட்ரோன் விமானத்தை உருவாக்கிய சிறுவன் என்ற சாதனையை படைத்து லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளான். இந்த ட்ரோன் விமானங்களை விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யமன் வர்மா ஏற்கனவே தனது ஒன்பதாவது வயதில் ரோபோ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.