ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை அள்ளிய இந்தியா! April 8, 2018

Image

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் 4ம் நாளில் 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. 

பூனம் யாதவ்:

மகளிருக்கான பளு தூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பூனம் யாதவ், 222 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். 

Snatch பிரிவில் 3 வாய்ப்புகளில் முறையே 95, 98 மற்றும் 100 கிலோ எடையை தூக்கிய பூனம், Clean & Jerk பிரிவில், 118 கிலோ மற்றும் 122 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

இங்கிலாந்தின் சாரா டேவிஸ் வெள்ளிப் பதக்கமும், ஃபிஜி நாட்டின் அபலோனியா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

விகாஸ் தாக்கூர்:

ஆடவருக்கான 94 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். 

Snatch பிரிவில் 3 வாய்ப்புகளில் முறையே 152, 156, 159 கிலோ எடையை தூக்கிய விகாஸ், Clean & Jerk பிரிவில் 184 மற்றும் 190 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார். இப்போட்டியில், கனடாவின் சான்டாவி வெள்ளியும், பப்புவா நியூகினியா வீரர் ஸ்டீவன் காரி தங்கப் பதக்கம் வென்றனர்

மனு பாக்கர் & ஹீனா சித்து:

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் ஹீனா சித்து ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். இறுதிப்போட்டியில் 240 புள்ளி 9 புள்ளிகள் பெற்ற ஹரியானாவின் மனு பாக்கர் காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தினார். 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹீனா சித்து இப்போட்டியில் 234 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் எலீனா 214 புள்ளி 9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ரவிகுமார்:

இதேபோல் ஆடவருக்கான் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவிகுமார் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். 

இதுவரையில் 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. 

பதக்கப்பட்டியல்:

67 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடமும், 40 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2ஆம் இடத்திலும், 26 பதக்கங்களுடன் கனடா 3ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.