தான் நினைத்தால் தற்போது கூட பிரதமராக முடியும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்தில் இருந்து எப்போதும் வருமானம் தேவைப்பட்டது இல்லை என்றும், இந்நிறுவனத்தை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தான் பிரதமராகும் வாய்ப்பு பாஜகவில் உள்ளதாக குறிப்பிட்ட பாபாராம் தேவ், அதற்காக பாஜக அலுவலகம் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புவதாகவும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார்.