சனி, 7 ஏப்ரல், 2018

அரசுப்பள்ளி சீருடையில் மாற்றம்! April 7, 2018

Image

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிச் சீருடையில் மாற்றம் செய்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் பேன்ட்டும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிறத்தில் பேன்ட்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை போன்று, மாணவர்கள் புதிய சீருடையை தங்கள் சொந்த செலவில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது