வியாழன், 12 ஏப்ரல், 2018

மோடியின் தமிழக வருகையை கண்டித்து, பலூன்களை பறக்கவிட்டு வைகோ போராட்டம்! April 12, 2018

Image


பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து சென்னை சின்னமலையில் தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பலுான்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மதிமுக சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சமூக ஒற்றுமையை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பஞ்சத்தை தலைவிரித்தாடவைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகக் குற்றம்சாட்டினார்.