ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

காவிரி உரிமை மீட்பு பயணம்: ஸ்டாலின் விளக்கம் April 7, 2018

Image

அறவழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று மாலை தொடங்க உள்ள மு.க. ஸ்டாலின், இந்த பயணத்தின் குறிக்கோள் குறித்து வீடியோ மூலம் 

விளக்கம் அளித்துள்ளார். அதில், இது அரசியல் பயணமல்ல என தெரிவித்துள்ள ஸ்டாலின், மறுக்கப்படுகிற உரிமையை பெருவதற்கான போராட்ட பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த பயணத்தின் ஒரே சிந்தனையாகவும், ஒரே கோரிக்கையையாகவும் இருப்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது விவசாயம் சார்ந்த போராட்டம் மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டின் தன்மானம் காக்கும் போராட்டம்  என்றும் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.