புதன், 12 பிப்ரவரி, 2020

3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது.
2011 - 12 காலகட்டத்தில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கோஷத்துடன் ‘லோக்பால்’ சட்டத்தை அமல்படுத்தக்கோரி சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே நடத்தி வந்த போராட்டத்தில் சக செயற்பாட்டாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வேறுபாடு காரணமாக தொடங்கிய அரசியல் கட்சி தான் ஆம் ஆத்மி. சாமானிய மக்களுக்கான கட்சி என்பது தான் ஆம் ஆத்மியின் அர்த்தம்.
யோகேந்திர யாதவ், குமார் விஸ்வாஸ், பிரஷாந்த் பூஷன், அசுதோஸ், கபில் மிஸ்ரா, மனிஷ் சிசோடியா போன்றோருடன் இணைந்து ஆம் ஆத்மியை 2012 நவம்பர் 26ல் தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
முதல்முறையாக 2013ல் டெல்லி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட ஆம் ஆத்மி ஆட்சி 28 இடங்களை கைப்பற்றியது. பாஜக 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் முதல் முறையாக டெல்லியின் முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால். எனினும் 49 நாட்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்த கெஜ்ரிவால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற இயலாத சூழலால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக சுமார் ஓராண்டு காலம் டெல்லி, துணை ஆளுநர் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. 2015ல் மீண்டும் டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அசுர பலத்துடன் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 
bjp
ஆம் ஆத்மி 54.3% வாக்குகளையும், பாஜக 32.3% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 9.7% வாக்குகளையும் பெற்றன.
5 ஆண்டுகள் முழுமையாக கெஜ்ரிவால் ஆட்சி செய்த போதிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதியில் ஒன்றில் கூட அக்கட்சி வெற்றிபெறவில்லை. மாறாக பாஜக 7 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவுடன் டெல்லி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது 58 இடங்களில் முன்னிலை வகிப்பதால் 3வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜகவுக்கு இந்த முறை 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 
கடந்த முறை 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றிருந்த நிலையில் இந்த முறை அக்கட்சி 9 தொகுதிகளை இழக்க நேரிடுகிறது. அதே போல கடந்த முறையை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 9 இடங்கள் கூடுதலாக கிடைக்க இருக்கிறது. 
அதே நேரத்தில் கடந்த தேர்தலை போலவே இத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போயுள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றி ஒரு புறம் இருந்தாலும், இந்த வெற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக என எதனை அதிகம் பாதித்துள்ளது என்பதே முக்கியத்துவம் பெறுகிறது.
cong
ஆம் ஆத்மிக்காக நாங்கள் விட்டுக்கொடுத்துவிட்டோம், பாஜகவை வீழ்த்தும் விதத்தில், வாக்குகள் சிதறுவதை தவிர்க்கும் பொருட்டு சரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக விளங்கும் தாரிக் அன்வரும், கே.டி.எஸ் துளசியும் ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டனர். 
ஆம் ஆத்மியின் வளர்ச்சி, பாஜகவை விட காங்கிரஸ் கட்சியையே அதிகம் பாதித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இரண்டு தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத நிலையில், கிட்டத்தட்ட தலைநகரில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
credit ns7.tv