ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து!

credit ns7.tv
Image
ஏழைகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு பழைய அறிவிப்புகள் புதியதைப் போன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் மேம்பாட்டிற்காகவோ, வேலை வாய்ப்பை உருவாக்கவோ இந்த பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று அவர் குறைகூறினார். 
எல்.ஐ.சி பங்குகளை விற்பது என்ற அறிவிப்பு குறித்து பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ப. சிதம்பரம், இந்த பட்ஜெட்டில் கீழடி அகழாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார். அதேநேரத்தில், வருமான வரி குறைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால், அதை வரவேற்பதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 முதல் 10 எண்களில் மதிப்பெண் அளிப்பதாக இருந்தால் பட்ஜெட்டிற்கு எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், 1 முதல் பூஜ்ஜியம் வரை ஏதாவது ஒரு மதிப்பை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.