வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கருத்துரிமையை காப்பாற்றுமா உச்சநீதிமன்றம்?


மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்காக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை டிசம்பர் 2019-இல் கொண்டுவந்தது மத்திய அரசு.
இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் — குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் — பெரிய அளவில் போராடி வருகின்றனர்.
தலைநகர் டில்லியில் நடைபெறும் இப்போராட்டங்களை அடக்குவதற்காக, விசாரணையின்றி சிறையில் அடைக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம் டில்லியில் ஜனவரி 19, 2020 முதல் ஏப்ரல் 18, 2020 வரை அமலில் இருக்கும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி கவர்னர் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்ஙகளில் ஈடுபடுவோர் குற்றச் செயலில் ஈடுபட்டால், அவர்கள் பேரில் காவல்துறை வழக்கை பதிவு செய்து, தேவைப்பட்டால் கைதும் செய்யலாம். கைது செய்யப்படுபவர் நீதிமன்றத்தை அனுகி பிணை பெறலாம்.
ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க இயலாது.
எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தை டில்லியில் போராடுவோருக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கருத்துரிமையை காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
காஷ்மீரில் எதிர்கட்சி தலைவர்கள் கடந்த 6 ஆறுமாத காலமாக, விசாரணையின்றி சிறையில் அடைக்கும் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பது சரிதானா என்ற வழக்கை இதுவரையில் விசாரித்து தீர்ப்பு வழங்காத உச்சநீதிமன்றம், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது ஆச்சரியமானது அல்ல.
எனவேதான், கருத்துரிமையை காக்குமா உச்சநீதிமன்றம் என்ற கேள்வி எழுகிறது.