மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபத்தால் மாணவர்களும், இளைஞர்களும் தாங்களாக முன் வந்து வீதியில் இறங்கிப் போராடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வைகோ பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ரோஹிங்கா முஸ்லீம்களையும், இலங்கை தமிழர்களையும் மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 11 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் 4 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டினார்.
சிஏஏவிற்கு எதிராக மக்களின் கருத்துக்களை ஒன்று திரட்டுவதற்காகவே திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம் மேற்கொள்வதாகவும் வன்முறையை தூண்டுவதற்காக அல்ல என்றும் வைகோ தெரிவித்தார்.
credit ns7.tv