சென்னையிலும், தமிழகத்திலும் எத்தனை பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உள்ளன என, அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பத்திரிகையாளர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஆதிக்கத்தை செலுத்தி, உண்மையான பத்திரிகையாளர்களை நுழைய அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
காவல் துறை தரப்பில், தமிழகத்தில் 204 பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து, போலி பத்திரிகையாளர்களை களைய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், உண்மையான பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். பின்னர், இந்திய அரசின், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படும் அகில இந்திய ஊழல் தடுப்பு பத்திரிகை என்ற அமைப்பு குறித்து விசாரித்து குற்ற நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்
credit ns7.tv