செவ்வாய், 6 அக்டோபர், 2020

பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

 பண்டிகைகள் மற்றும் விழாக்களில் கடைபிடிக்க வேண்டிய நிலையானவழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

 

நாட்டில் வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வுகள் போது பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, பண்டிகை நிகழ்வுகளுக்கு கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதி கிடையாது. 


65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


விழாக்களை நடத்தும் முன் முழுமையாக திட்டமிடுதல் அவசியம்


கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் சமூக இடைவெளி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். 


முக கவசங்களை அணிவது கட்டாயம் நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மேடை கலைஞர்களுக்கு முழுமையாகப் பொருந்தும். 


உடல் வெப்ப சோதனை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
தேவையான இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவை நிறுத்த வேண்டும்.

Related Posts:

  • அல்லாஹ்வின் வல்லமை!அல்லாஹ்வின் வல்லமை! கே.எஸ்.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி பேச்சாளர்,TNTJ திருவிதாங்கோடு - கன்னியாகுமரி தர்பியா - 27.11.2024 … Read More
  • நாங்கள் சொல்வது என்ன?நாங்கள் சொல்வது என்ன? செங்கோட்டை N.பைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ மேட்டுப்பாளையம் - பொதுக்கூட்டம் - 21.09.2024 … Read More
  • நாம் ஏன் படைக்கப்பட்டோம்நாம் ஏன் படைக்கப்பட்டோம் செ.அ.முஹம்மது ஒலி மாநிலச் செயலாளர்,TNTJ மாணவர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - 29.09.2024 பல்லாவரம் - செங்கை மேற்கு மாவட்டம் … Read More
  • கணவன் மனைவி கடமைகளும், உரிமைகளும்கணவன் மனைவி கடமைகளும், உரிமைகளும் செ.அ.முஹம்மது ஒலி மாநிலச் செயலாளர், TNTJ குடும்பவியல் தர்பியா 27.10.2024 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் … Read More
  • எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம் ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம்-21-12-2024 மதுரை மாவட்டம் - ஜீவா நகர் … Read More