வெள்ளி, 2 அக்டோபர், 2020

பாபர் மசூதி இடிப்பு : சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ஏன் நியாயமற்றதாக பார்க்கப்படுகிறது?

 Why the Babri Masjid demolition verdict is being seen as unjust : கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கின் வரலாற்று தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு என்பது மிகவும் மோசமான தவறு என்று கூறியது. புதன்கிழமை அன்று குற்றம் சுமத்தப்பட்ட 49 நபர்களில் உயிருடன் இருக்கும் 32 நபர்களும் குற்றமற்றவர்கள் என்று கூறி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் பீனல் கோடின், வன்முறையை தூண்டுதல் (பிரிவு 135ஏ மற்றும் 153பி), குற்றத்தை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டுதல் (பிரிவு 120பி) மற்றும் சட்டத்திற்கு புறம்பாக ஒருங்கிணைதல் (பிரிவு 149) போன்ற பிரிவுகளின் கீழ், இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



ஒரு குற்றத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு வெறும் ஒப்புதலே தண்டனைக்கு போதுமானது. சட்டத்திற்கு புறமாக கூடுதலுக்கு வெறும் இருப்பே போதுமானது. உண்மை, குற்றவிசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்படும் ஒரு சிறிய சந்தேகம் கூட பலன் அளிக்கிறது. ஆனாலும் சி.பி.ஐயால் நம்பத்தகுந்த ஆதாரங்களை முன்வைக்க இயலவில்லை. குறிப்பாக, சதித்திட்டங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக.

குற்றம் சுமத்தப்பட்ட அனைத்து நபர்களையும் வழக்கில் இருந்து விடுவித்ததாலும், மசூதி இடிப்பானது தற்செயலாக நடைபெற்றது, இதற்காக அறியப்படாத சமூக விரோதிகளை தவிர வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது என்று கூறியதாலும் இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பாகிறது என்று என்.ஏ.எல்.எஸ்.ஏ.ஆர் சட்டப் பழ்கலைகழகத்தின் ஃபைசான் முஸ்தஃபா மற்றும் அய்மான் முகமது ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியுள்ளனர்.

ஆடியோ தெளிவாக இல்லாததால் 100க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் விசாரணையின் போது வாய்வழியாகவும், ஆவணப்படுத்தல் முறையில் அறிக்கைகள் பெறப்பட்டது. 351 சாட்சியாளர்கள் சாட்சியம் அளித்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இருப்பினும் சி.பி.ஐயால் நீதிபதியை ஏற்றுக் கொள்ள வைக்க இயலவில்லை.  “பாபர் மசூதி இடிப்பு வழக்கு தனித்துவமானது. மேலும் சிவில் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இதற்கு முன்பு இப்படி ஒரு வழக்கு இல்லை” என்று கூறப்படுகிறது. .

“வழக்கு மற்றும் விசாரணை செயல்பாடுகள் இரண்டாகப் பிரிக்கப்படாவிட்டால் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு மேம்படுத்த முடியாது. குற்றவியல் சட்ட சீர்திருத்தக் குழு இது குறித்து வலுவான பரிந்துரையை வழங்க வேண்டும், ”என்று அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தனர்.