ட்விட்டர் டிரெண்டிங் வழிமுறை (algorithm) எவ்வாறு செயல்படுகிறது?
ட்விட்டர் டிரெண்டிங் வழிமுறை (algorithm) பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. பயனர்கள் அவர்கள் யார், அவர்களின் ஈடுபாடு மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த டிரெண்டிங் என்பது ட்விட்டர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும் வலைதள பயனர்களுக்கும் தெரியும். மேலும், பயனர்களுக்கு தனிப்பட்ட தேவைகளுக்கு இல்லாமல் டிரெண்டிங்கைக் காட்டும் ஒரு பிரபலமான பகுதியும் உள்ளது.
இது குறித்து ட்விட்டர் கூறுகையில் “இந்த வழிமுறை இப்போது பிரபலமான தலைப்புகளை அடையாளம் காண்கிறது. இது சிறிது காலமாக அல்லது தினசரி அடிப்படையில் பிரபலமாக உள்ள தலைப்புகளை விட, ட்விட்டரில் பரபரப்பாக வெளிவரும் தலைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.” என்று தெரிவிக்கிறது.
மேலும், “டிரெண்டிங்குடன் தொடர்புடைய ட்வீட்களின் எண்ணிக்கை மற்றும் டிரெண்டிங்கை தரவரிசைப்படுத்துதல், தீர்மானிக்கும் டிரெண்டிங்குகள் ஆகியவை டிரெண்டிங் வழிமுறையைப் பார்க்கும் காரணிகளில் ஒன்றாகும்.” என்று கூறுகிறது.
ஆனால், தரவு (data) விஞ்ஞானி கிலாட் லோட்டன் போன்ற வல்லுநர்கள் இந்த வழிமுறை (algorithm) படிப்படியாக நீடித்த வளர்ச்சியைக் காட்டிலும் கூர்மையான அதிகரிப்பை ஆதரிக்கிறது என்றும் டிரெண்டிங்குகள் அளவின் கலவையால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் ஒரு அளவை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்றும் விளக்கினார்.
எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நிறைய ட்வீட்டுகள் இருந்தால் அது டிரெண்டிங் ஆகத் தொடங்கும். மற்ற டிரெண்டிங்குகள் முக்கியமில்லாத நேரத்தில் இந்த செயல்பாடு நடக்கும்போது, இன்று அதிகாலையைப் போலவே, ஹேஷ்டேக் ஒரு முதல்நிலை டிரெண்டிங் ஆக மாற அதிக வாய்ப்பு உள்ளது.