சனி, 3 அக்டோபர், 2020

பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்: நாராயணசாமி

 பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து,  புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி,  அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின பெண் மீதான குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி,  உத்தரப்பிரதேச மாநில அரசை பதவி நீக்கம் செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.