செவ்வாய், 30 நவம்பர், 2021

அதிக அபாயத்தை உருவாக்கும் ஒமிக்ரான்; உலக நாடுகள் தயாராக வேண்டும்: உலக சுகாதார நிறுவனம்

Omicron / ஒமிக்ரா 29 11 2021 இன்றுவரை, ஒமிக்ரானுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் ஓமிக்ரானின் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.பெரிய அளவில் மாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது. சில இடங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய...

221 நாள்கள் அமலில் இருந்த வேளாண் சட்டங்கள்… ரத்து மசோதா சொல்வது என்ன?

 மக்களவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார்.வேளாண் சட்ட ரத்து மசோதா 2021 என்றால் என்ன?இந்த வேளாண் சட்ட ரத்து மசோதா 2021, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டது.அத்தியாவசியப்...

300 சாலைகளுக்கு ஒப்பந்தம்: எஸ்.பி வேலுமணி சொன்னது பொய்யா? சவால் விடும் செந்தில் பாலாஜி!

 கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாகக் கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை முடிந்தால் இரண்டு நாட்களில் வெளியிட வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித்...

மனித கழிவுகளை அகற்றும் புதிய ரோபோ… அசத்தும் சென்னை ​​ஐஐடி மாணவர்கள்!

 Chennai city Tamil News: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்கிறது. கடந்த 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அப்புறப்படுத்த, மத்திய அரசு தடை விதித்தது. அந்த தடையை 2013ம் ஆண்டில் மீண்டும் வலுப்படுத்தியது. மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை, போர்கால அடிப்படையில்,...

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

 கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம்வங்கக்கடலில்...

முன்னாள் அமைச்சர் மீது மோசடி வழக்கு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை

 )அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று ஆஜரானார் முன்னாள் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர். மோசடி வழக்கு ஒன்று தொடர்பாக அமலாக்கத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேரில் ஆஜரானார் அவர். 2016ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.கேரளாவில் உள்ள...

அரசு அலுவலகங்களில் பிரதமர் புகைப்படம்; தமிழக அரசை வலியுறுத்தும் ....

 30 11 2021 தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பிற மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநில அரசின் விழாக்களில் அமைக்கப்பட்டுள்ள பதாகைகளில் பிரதமர் நரேந்திர...

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 12 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் மழை நீரால் ஏராமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த...