ஞாயிறு, 28 நவம்பர், 2021

தண்ணீரில் தத்தளிக்கும் தமிழகம்

 27 11 2021 Tamilnadu Rain Floods Update : இம்மாத தொடக்கத்தில் மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னை தற்போது மாத இறுதியிலும், வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளம் தொடர்பாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதை தொடர்ந்து பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் அரசு அலுவலங்கள், மருத்துவமனை சாலைகள் என பல இடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், மழை வரத்தும் குறைந்தது இதனால் பொதுமக்கள் இயல்புவாழ்ககைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் கனமழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழக கடலோர பகுதிகளிலவ் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கார்களின்  டயர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களையும் தள்ளிக்ககொண்டு போகும் சூழ்நிலையே அதிகம் உள்ளது.

இதில் வேளச்சேரி, நேரு தெரு ஈசிஆர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்தால், சாக்கடை நீருடுன் மழைநீர் கலந்து பல பகுதிகளை மூழ்கடித்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மரங்களில் தடுப்பால் பல இடங்களில் தேங்கி நிற்கின்றன.

2 நாட்களிலேயே இப்படி மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் வரும நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதில் மதுராந்தகம் அருகே செய்யூரில், அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்துவிட்டதால், அங்கிருந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர்களும் செவிலியர்களும் வெளியேறிய பின், மருத்துவமனை பூட்டப்பட்டுவிட்டது.

அதேபோல் குடுவாஞ்சரியில் கனத்த மழை பெய்துவருகிறது. அனைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ள நீர் காற்றாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இது தொடர்பாக புகைப்படங்களும் வீடியோக்களும் இணையததில் வைரலாகி வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மூழ்கியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-update-in-chennai-floods-viral-videos-rain-375299/