23 11 2021
தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் ரூ.3,000 கோடி மதிப்பில் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் வர உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் 4GW ஒருங்கிணைந்த சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக டாடா குழுமத்தின் சூரிய சக்தி தமிழக அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தில், “சுமார் ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டம் அப்பகுதியில் 2,000 மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். முக்கியமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்” என்று தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த முதலீடு தமிழகத்தை கவர்ச்சிகரமான சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதோடு தென் மாநிலங்களுக்கு புதிய முதலீடுகளை கொண்டு வர உதவும் என்று தெரிவிக்கின்றனர்.
விக்ரம் சோலார் நிறுவனம் ஒரகடத்தில் 1.2 ஜிகாவாட் திறன் சோலார் பேனல்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை ஜூலை மாதமே தொடங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், சென்னை அருகே பிள்ளைப்பாக்கத்தில் உள்ள பசுமை பகுதியில் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முதல் சூரியசக்தி 3.3 ஜிகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் மின்னழுத்த மெல்லிய பிலிம் சோலார் தொகுதி உற்பத்தி வசதிக்காக 684 மில்லியன் டாலர் முதலீடு செய்து 2023ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோலார் பேனல் உற்பத்தி என்பது முதலீட்டிற்கு பெரிய வாய்ப்புள்ள துறையாகும். ஏனென்றால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக சூரியசக்தி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான போட்டி இதில் வேகத்தை அதிகரித்து வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் 50% எரிசக்தித் தேவைகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பூர்த்தி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜாம்நகரில் சூரியசக்தி மின்கலங்கள், கிரீன் ஹைட்ரஜன், பேட்டரிகள் மற்றும் எரிபொருள் செல்களை தயாரிக்க நான்கு ‘ஜிகா’ தொழிற்சாலைகளை ரூ.60,000 கோடியில் கட்டவுள்ளது. இந்த உற்பத்தி அலகுகள் 100 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி திறனை உருவாக்க ரிலையன்ஸின் இலக்கில் முக்கிய பங்கு வகிக்கும்.
3.5GW சூரிய சக்திக்கு ஒளிமின்னழுத்த செல்களை தயாரிக்கும் திட்டத்துடன் அதானி சோலார் முன்னணியில் தீவிரமாக உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tata-groups-rs-3000-crore-solar-plant-to-come-up-near-thirunelveli-in-tamil-nadu-soon-373387/