புதன், 17 நவம்பர், 2021

சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளை செய்த விசிக வழக்கறிஞர்

 

சீர்காழி காவல் நிலையத்தில் விபத்து தொடர்பான புகார் குறித்து வழக்கறிஞர் ஒருவர், மது போதையில் வந்து கேஸ் போட்டால் வெட்டுவேன் என காவலர்களையும் அவர் மீது புகார் கொடுக்க வந்தவரையும் ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியில் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் பார் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார். இவர் குடிபோதையில் காரை ஓட்டி சென்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக, வழக்கறிஞர் ராஜேஷ், காவல் நிலையத்திற்கு மது போதையில் சென்று புகார் அளித்தவர்களையும் காவல் நிலைய ஆய்வாளரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். மேலும், தன் மீது கேஸ் போட்டால் வெட்டுவேன் என்று மிரட்டடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, போலீசாரால் கைது செய்யப்ப்பட்ட வழக்கறிஞர் ராஜேஷ் நீதிமன்ற ஜாமீனில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் ராஜேஷ் சீர்காழி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆபாசமாக திட்டி கேஸ் போட்டால் வெட்டுவேன் என்று மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/advocate-slandering-and-threatening-in-sirkali-police-station-370236/