சனி, 20 நவம்பர், 2021

கொரோனாவை தடுக்க ஒற்றை டோஸ் போதும்… ஆஸ்ட்ரஜெனகாவின் ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

 அஸ்ட்ராஜெனெகா அதன் ஆன்டிபாடி கலவையான AZD7442, ஒரு இன்ட்ராமுஸ்குலர் டோஸ் மூலம் கோவிட் -19 ஐத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் வலுவான செயல்திறனைக் காட்டியுள்ளது என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆன்ட்டிபாடி கலவை எப்படி உருவாக்கப்பட்டது?

AZD7442 என்பது இரண்டு நீண்டகால ஆன்டிபாடிகளின் (LAABs) கலவையாகும். அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முக்கிய கோவிட்-19 தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் கோவிஷீல்ட் என்பது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இந்திய பதிப்பாகும்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அஸ்ட்ராஜெனெகா, ஜூன் 2020 இல் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கொரோனா வைரஸ்-நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளுக்கான உரிமத்தைப் பெற்றது, மேலும் இந்த மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் ஒரு ஜோடி mAbsஐ மருத்துவ வளர்ச்சிக்காக பான்படுத்தப்பட்டது. AZD7442 என்பது வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தால் கண்டுபிடிக்கப்பட்ட tixagevimab மற்றும் cilgavimab எனப்படும் LAABகளின் கலவையாகும். இந்த மனித மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தில் தனித்துவமான தளங்களுடன் பிணைக்கிறது. அஸ்ட்ராஜெனெகாவின் தொழில்நுட்பத்தால் அவை மேம்படுத்தப்பட்டன, இது வழக்கமான ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும்போது அதன் செயல்பாட்டின் ஆயுள் மூன்று மடங்கு அதிகமாகும் என அஸ்ட்ராஜெனெகா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

AZD7442 COVID-19 PROVENT தடுப்பு மற்றும் TACKLE சோதனைகள் மூலம் இந்த முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ROVENT சோதனையானது மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது AZD7442 இன் ஒற்றை IM 300mg அளவை மதிப்பிடுகிறது. கோவிட்-19 இன் வெளிநோயாளர் சிகிச்சைக்கான ஒற்றை 600mg IM அளவை TACKLE சோதனை மதிப்பிடுகிறது. அஸ்ட்ராஜெனெகா கூறுகையில், இந்த சோதனையானது பலனை நிரூபித்துள்ளது என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் 87 இடங்களில் 5197 நபர்கள் மத்தியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. AZD7442 இன் ஒரு 300mg IM டோஸ் மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது அறிகுறியான கோவிட்-19 உருவாகும் அபாயத்தை 83% குறைக்கிறது. பேஸ்லைனில் 75%க்கும் அதிகமான PROVENT பங்கேற்பாளர்கள் அதிக ஆபத்தில் இருக்கும் இணை நோய்களை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, AZD7442 உடன் சிகிச்சை பெற்றவர்களில் கடுமையான கோவிட் அல்லது கோவிட் தொடர்பான இறப்புகள் எதுவும் இல்லை. ஆனால் ப்ளஸ்போவில் இரண்டு கோவிட் தொடர்பான மரணங்களும், ஐந்து கோவிட் தொற்று மரணங்களும் பதிவானது.

டாக்கில் சோதனை 903 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மிதமான கோவிட் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்த வெளிநோயாளிகள் ஆவார்கள். ஒரு 600mg IM டோஸ் மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது கடுமையான கோவிட்-19 அல்லது மரணம் (எந்த காரணத்தினாலும்) உருவாகும் அபாயத்தை 88% குறைக்கிறது. இந்த சோதனையில் பங்கேற்ற 90% பேர் எளிமையாக நோய் தொற்றில் முன்னேறி செல்லும் அபாயத்தைக் கொண்ட மக்கள் தொகை பிரிவில் இருந்து வந்தவர்கள்.

இரண்டு சோதனைகளிலும் , AZD7442 பொதுவாக நன்கு செயல்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரஜெனாகா கூறியுள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஏன் முக்கியம்?

கண்டுபிடிப்புகளை அறிவிக்கும் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில், உலக மக்கள்தொகையில் சுமார் 2% பேர் கோவிட் தடுப்பூசிக்கு தேவையான மருந்துகளை பெற முடியாத அபாயத்தில் உள்ளனர் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரத்த புற்றுநோய் அல்லது கீமோதெரபி மூலம் சிகிச்சையளிக்கப்படும் பிற புற்றுநோய்கள் உள்ளவர்கள், டயாலிசிஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களைக் கொண்டவர்களும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் இதில் அடங்குவர்.

PROVENT என்பது முதல் கட்ட 3 சோதனை ஆகும், இது அதிக ஆபத்துள்ள மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு ஆன்டிபாடி மதிப்பீடு செய்யும் வகையில் ஆராய்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/astrazeneca-antibody-combo-twin-trails-indicate-single-dose-helps-prevent-and-treat-covid-371449/