செவ்வாய், 23 நவம்பர், 2021

டெல்லிக்கு செல்லும் மம்தா… தர்ணா நடத்திட அறிவுறுத்தியதால் பரபரப்பு

 மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் வருகை காரணமாக, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி செல்வதற்கு முன்பே, கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு மேற்கு வங்க இளைஞர் பிரிவுத் தலைவர் சயானி கோஷ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டத்தை நடத்திட மம்தா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் பிரதமர் மோடி மட்டுமல்லாது முக்கிய எதிர்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார் என கூறப்படுகிறது.

கூட்டத்தை தவிர்த்த ஓம் பிர்லா

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நவம்பர் 27-28 தேதிகளில் மாட்ரிட்டில் நடைபெறும் பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய நாடாளுமன்றக் குழுவை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் தங்கள் சபாநாயகர்கள் வருகையை உறுதி செய்யாததால், கூட்டத்தைத் தவிர்க்க பிர்லா முடிவு செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இப்போது எம்.பி.க்கள் குழுவிற்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. தற்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் பிர்லா கவனம் செலுத்துவதாகவும், அதனை சமூகமாக நடத்தி முடித்திட விரும்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவு புதிய பணி

ஓமானுக்கு இந்தியத் தூதராக இருந்த முனு முஹாவர், தற்போது மாலத்தீவுகளின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஹாவர் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்தார்.அனுபவம் வாய்ந்த ராஜதந்திரிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், சில குழுக்கள் நாட்டில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவருவதால், சவாலான பணியை மேற்கொள்ளவுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/delhi-is-set-to-rise-on-monday-with-the-arrival-of-west-bengal-chief-minister-mamata-banerjee-372658/