செவ்வாய், 30 நவம்பர், 2021

புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

 நாட்டில் உள்ள மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் புதிய திட்டங்கள் கடந்த வாரம் அமலுக்கு வந்தன. ஜியோ நேற்று விலை உயர்வை அறிவித்தது. ஜியோவின் புதிய திட்டங்கள் டிசம்பர் 1 முதல் செயல்படத் தொடங்கும். சிறந்த விலையில் அதிகபட்ச டேட்டாவை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.400-க்குள் புதிய திட்டங்கள்


ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சுமார் 20-25 சதவிகிதம் உயர்வை அறிவித்தது. இது நவம்பர் 26 முதல் அமலுக்கு வந்தது. ஏர்டெல்லின் ரூ. 149 திட்டம், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 2 ஜிபி டேட்டாவுடன் இப்போது ரூ.179 விலையில் கிடைக்கும்.

1ஜிபி தினசரி டேட்டாவுடன் ரூ.219 செலவாகும் அடுத்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் அன்லிமிடெட் அழைப்புக்கு ரூ.265 செலவாகும்.

மற்றொரு பிரபலமாக இருந்த ரூ.249 திட்டம், இப்போது ரூ.299 விலையைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இறுதியாக, 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் ரூ.298 திட்டம், அன்லிமிடெட் அழைப்பு, நாளுக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் ரூ.359 செலவாகும் விலையில் வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

இதற்குப் பிறகு, ஏர்டெல்லின் புதிய விலை வரம்பிற்கு ஏற்ப அனைத்து புதிய திட்டங்களும் இப்போது ரூ.400-க்கு மேல் செலவாகும்.

ஏர்டெல் புதிய திட்டங்கள் vs பழைய திட்டங்கள்: விலைகள், நன்மைகள்

 ரூ.400க்கு கீழ் வோடபோன் – ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன்-ஐடியாவும் ஏர்டெல்லைப் போலவே ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலைகளை உயர்த்தியுள்ளது. ரூ.149 திட்டமானது இப்போது ரூ.179-ல் இருந்து மொத்தம் 2ஜிபி டேட்டாவுடன் தொடங்குகிறது. இருப்பினும் இதில் ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் மட்டுமே உள்ளது. அன்லிமிடெட் அழைப்பு இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வோடஃபோனின் ரூ.219 இப்போது ரூ.269 ஆக உள்ளது. இது ஏர்டெல்லை விட சற்று அதிகம். இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு உள்ளது.

வோடஃபோனின் ரூ.249 திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் இப்போது ரூ.299 விலையில் கிடைக்கும். இது ஏர்டெல்லைப் போலவே உள்ளது. இறுதியாக, ரூ.299 திட்டத்திற்கு ரூ.359 செலவாகும். மேலும் நாள் ஒன்றுக்கு 2ஜிபியுடன் தொடர்கிறது. இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ஏர்டெல்லைப் போலவே, வோடபோன்-ஐடியாவும் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களின் விலைகளை 400 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது.

வி புதிய திட்டங்கள் vs பழைய திட்டங்கள்: விலை, நன்மைகள்

ரூ.400க்கு கீழ் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோவின் தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வுக்கு முன்பே வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குறைந்த தொடக்க விலை இருந்தது. மேலும், திட்டங்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் இது தொடர்கிறது. இந்த திட்டங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். எனவே பழைய திட்டங்களை ரீசார்ஜ் செய்ய இன்னும் நேரம் உள்ளது.


ரூ.129 திட்டத்தில் மொத்தம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவை இப்போது ரூ.155 விலையில் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.149 இப்போது ரூ.179 ஆக உள்ளது. ஆனால், ஏர்டெல் மற்றும் Vi-யுடன் ஒப்பிடும்போது இது சிறந்த டேட்டா நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதன் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் மட்டுமே.

ஜியோவின் ரூ.199 திட்டமானது தினசரி டேட்டா வரம்பு 1.5ஜிபி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ரூ.239 ஆகும். ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ரூ.299 செலவாகும். ஏர்டெல் மற்றும் Vi-யுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டங்கள் ஒப்பீட்டளவில் மலிவானவை.

ஜியோ புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்கள்: விலை, நன்மைகள்

முதலில் ரூ.399-ஆக இருந்த ஜியோவின் அடுத்த திட்டம், இப்போது ரூ. 479 ஆக இருக்கும். இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வரும்.

ஏர்டெல், VI மற்றும் ஜியோ ஆகியவை நீண்ட செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தியுள்ளன. இவை இப்போது மிகவும் விலை உயர்ந்தவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5 ஜிபிக்கு அதிகமான தினசரி டேட்டா கொண்ட திட்டங்களுக்கு இப்போது சராசரியாக ரூ.600-க்கு மேல் செலவாகும்.

source https://tamil.indianexpress.com/technology/jio-vs-airtel-vs-vodafone-idea-best-new-prepaid-plans-under-rs400-tamil-news-375994/