திங்கள், 29 நவம்பர், 2021

புதிய கொரோனா வகைக்கு ஒமிக்ரான் என பெயரிட்ட WHO

 28 11 2021 கொரோனாவின் (SARS-CoV2) மாறுபாடுகளுக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​உலக சுகாதார நிறுவனம் இதுவரை கிரேக்க எழுத்துக்களின் இரண்டு எழுத்துக்களைத் தவிர்த்துள்ளது, அதில் ஒன்று சீனாவில் பிரபலமான குடும்பப்பெயராக உள்ளது, அந்த எழுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒரு பகுதியாக கூட வருகிறது.

WHO மிகவும் பரவலாக உள்ள கொரோனா வைரஸ் வகைகளைக் குறிக்க கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஏனெனில் அவை நீண்ட அறிவியல் பெயர்களைக் கொண்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடு வெளிப்படுவதற்கு முன்பு, WHO ஏற்கனவே கிரேக்க எழுத்துக்களின் 12 எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்னுள்ள இரண்டு எழுத்துக்களான Nu அல்லது Xi என்பதற்குப் பதிலாக WHO புதிய மாறுபாட்டிற்கு Omicron ஐத் தேர்ந்தெடுத்தது.

குடும்ப பெயராக உள்ளதால் Xi எடுக்கப்படவில்லை, மற்றும் ​​’புதிய’ (New) என்ற வார்த்தையுடன் Nu குழப்பமடையலாம் என்பதால் அதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று WHO கூறியது.

“இரண்டு எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவை Nu மற்றும் Xi. இவற்றில் Nu என்பது “புதிய” (New) உடன் மிகவும் எளிதில் குழப்பமடைகிறது மற்றும் XI பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் இது ஒரு பொதுவான குடும்பப்பெயர். புதிய நோய்களுக்கு பெயரிடுவதற்கான WHO வின் சிறந்த நடைமுறைகள் மூலம் (2015 இல் FAO மற்றும் OIE உடன் இணைந்து உருவாக்கப்பட்டது) ‘எந்தவொரு கலாச்சார, சமூக, தேசிய, பிராந்திய, தொழில்முறை அல்லது இனக்குழுக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை’ தவிர்க்க பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது,” WHO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டு எழுத்துக்களைத் தவிர்த்துவிட்டு, அடுத்து கிடைக்கக்கூடிய ஒன்றைப் பயன்படுத்தி சமீபத்திய மாறுபாட்டிற்கு பெயரிட WHO எடுத்த முடிவு இணையத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

வைரஸ்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலைப் பொறுத்து, WHO புதிய வகைகளை ‘கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடுகள் (VUMகள்)’, ‘ஆர்வத்தின் மாறுபாடுகள் (VoIs)’ அல்லது ‘கவலை மாறுபாடுகள் (VoCs)’ என வகைப்படுத்துகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை அவற்றின் பெற்றோரையும் பரிணாமச் சங்கிலியையும் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓமிக்ரான் மாறுபாடு B.1.1.529 என்ற அறிவியல் பெயரால் அறியப்படுகிறது. இந்த பெயர் B.1 மாறுபாட்டிலிருந்து புதிய மாறுபாடு உருவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

விஞ்ஞானப் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது எளிதல்ல என்பதால், மிகவும் பரவலாக உள்ள மாறுபாடுகள் முதலில் எந்த நாட்டில் இருந்து அறிவிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயரால் பெயரிடப்பட்டது. அதன்படி, ஒரு இங்கிலாந்து மாறுபாடு, ஒரு இந்திய மாறுபாடு, ஒரு தென்னாப்பிரிக்க மாறுபாடு, ஒரு பிரேசிலிய மாறுபாடு மற்றும் இன்னும் சில இருந்தன.

பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவதாலும், எந்த நாட்டின் பெயரைக் கொண்டுள்ளதோ அந்த நாட்டின் மீது பிற நாடுகள் பழி போடுவதை தவிர்க்க பெயரிடப்பட்ட குறிப்பிட்ட நாடுகளுடனான தொடர்பை நீக்குவதற்காகவும், முக்கிய மாறுபாடுகளை எளிதாக அடையாளம் காணவும் புதிய பெயரிடும் முறையை கடைபிடிக்க WHO முடிவு செய்தது. இதற்காக WHO கிரேக்க எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முன்னர் ‘இந்தியன்’ என்று குறிப்பிடப்பட்ட மாறுபாடு டெல்டா என்ற பெயரைப் பெற்றது, அதே நேரத்தில் இங்கிலாந்து மாறுபாடு ஆல்பா என்று அழைக்கப்பட்டது.

தற்போது ஐந்து VoCகள் உள்ளன – ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஓமிக்ரான். இரண்டு VoIகள் லாம்ப்டா மற்றும் மு என்று அழைக்கப்படுகின்றன. கப்பா, ஈட்டா அல்லது ஐயோட்டா போன்ற சில வகைகள், அவற்றின் VoI வகைப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவை இப்போது பரவலாக புழக்கத்தில் இல்லை மற்றும் முந்தையதை விட கணிசமாக குறைவான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

SARS-CoV2 வைரஸின் புதிய மாறுபாடுகள், மரபணு அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு, கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் வெளிப்படுகின்றன, ஆனால் அவை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை அல்ல. மனிதர்களுக்கு அதன் அச்சுறுத்தலை அதிகரிக்கும் மரபணு மாற்றங்களைக் கொண்ட மாறுபாடுகள் மட்டுமே VuMs, VoIs அல்லது VoCs என வகைப்படுத்தப்படுகின்றன.

source https://tamil.indianexpress.com/india/who-greek-letters-name-new-covid-19-variant-omicron-375544/