திங்கள், 5 செப்டம்பர், 2022

எச்சரித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்


தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க உள்ளார். இது குறித்து ஈரோடு , திருப்பூர் , கோவை , நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஏஸ்.அழகிரி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா , செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , ராகுலின் பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் வளர்ச்சியடையும் என்றார். தமிழக பா.ஜ.க 






தலைவர் அண்ணாமலை மிக மோசமாக நடந்து கொள்ளவதாக குற்றம் சாட்டிய இளங்கோவன் , காங்கிரஸ் கட்சியினரை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட மாட்டோம் அதற்கு பதிலாக உதைப்போம் என்றார்.

மிகப்பெரிய தலைவர்கள் இருந்த தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வால் நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய இளங்கோவன், கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஓட்டுவாங்குவதற்காக கோயிலுக்கு செல்வதாகவும் , இப்போது எல்லாம் பணத்திற்காக தான் மக்கள் ஒட்டு போடுவதால் அரசியல்வாதிகளை அயோக்கியன் என சொல்ல மக்களுக்கு உரிமை இல்லை என்று கூறினார்.


 source https://news7tamil.live/evks-ilangovan-warned-annamalai.html

Related Posts: