திங்கள், 5 செப்டம்பர், 2022

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த திமுக கவுன்சிலர் ஆடியோ வைரல்

 

பொதுமக்கள் பிரச்சனையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகப் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ திருச்செந்தூர் முழுவதும் வைரலாகிவருகிறது. 

அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது, திருச்செந்தூர் நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது. இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்கள் வந்த தரித்திரமா, என விரக்தியில் பேசுயுள்ளார். அதோடு அனைத்து பொதுமக்களும் குடிதண்ணீர் கிடைக்கவில்லை எனத் திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க, ஆனால் குடிதண்ணீர் கொடுக்க முடியவில்லை எனவும் நகராட்சி நிர்வாகம் குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் புது நகராட்சி, புது கட்டிடம் என்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும், தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இல்லையென்றால் ஒரு நாள் நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்டக் கூடிய நிலைமை வரும் எனப் பேசியுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் நகராட்சி 3-வது நகராட்சி உறுப்பினர் ரூபன் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


source https://news7tamil.live/audio-of-dmk-councilor-who-voiced-peoples-problem-went-viral.html

Related Posts: