அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட்
ஹெட்லியை வைத்து சதுரங்கம் ஆடும்
நடுவன் மோடி அரசு ..
ஹெட்லியை வைத்து சதுரங்கம் ஆடும்
நடுவன் மோடி அரசு ..
டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகின்றது இந்தியாவுக்கு கொண்டு வர நடுவன் அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை ..
2004 ல் குஜராத்தில் அரச பயங்கரவாத்தின் மூலம் இர்ஷத் ஜஹான் படுகொலையை மூடி மறைக்கவும் , பிரதமர் மோடி மற்றும் அமீத்ஷா ஆகியோரை காப்பாற்றவும் டேவிட் ஹெட்லி என்கிற கதாபாத்திரத்தின் விடியோ கான்பரன்ஸ் நாடகம் இப்போது இந்தியாவில் நடந்தேரி வருகின்றது .
இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் தலைப்பு செய்தியாக்கப்பட்டுள்ளது இர்ஷத் ஜஹான் படுகொலை ..
நாட்டை காப்பாற்ற நடந்த தற்காப்பு தாக்குதல் என இர்ஷத் கொலையை நியாப்படுத்தி வருகின்றனர் .
குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே, கடந்த 2004–ம் ஆண்டு, இஷ்ரத் ஜகான் என்ற 19 வயது கல்லூரி மாணவி, குஜராத் கிரைம் பிராஞ்ச் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய நண்பர்கள் என பிரனேஷ் பிள்ளை என்ற ஜாவீது ஷேக், அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகியோரும் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டதாக கூறி கொலை செய்தனர் அன்றைய குஜராத் முதல்மந்திரி மோடி , உள்துறை அமைச்சர் அமீத்ஷா.
ஆனால், அது போலி என்கவுன்டர் என்றும், அப்பாவியான அவர்களை போலீசார் பிடித்து வைத்து திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு பின் இர்ஷத் ஜஹான் வழக்கு புதிய பரிணாமத்தில் பொய்யான குற்றச்சாட்டை வீதியில் உலாவிடுகின்றது பி.ஜே.பி அரசு ..
விடியோ கான்பரன்ஸ் மூலம் ரகசியவிசாரனை என புதுமையை புகுத்தி புளுகை அவித்துவிட்டு அப்பாவி கல்லூரி மாணவி இர்ஷத் ஜஹான் படுகொலையை பள்ளம் தோண்டி புதைக்கின்றனர் ..
ராஜீவ் படுகொலையை ரகசியவிசாரனை என அன்றைய நடுவன் அரசு உத்திரவிட்ட போது கடுமையாக எதிர்த்தவர் ஷஹித் பழனிபாபா அவர்கள் ஒவ்வொரு மேடைகளிலும் என்னடா புடலங்கா ரகசிய விசாரனை உலகத்திலே ரகசியமாக நடப்பது கணவன் , மனைவி உறவு பந்தம் மட்டுமே அதுவே இன்று வீதியில் உலா வரும் போது ராஜீவ் வழக்கை ரகசியமாக நடத்துரிங்க என்றவர் பாபா .
தீவிரவாத தடுப்புதுறை அரசு வழக்கறிஞர் உஜ்ஜால் நிகாம் செய்தியாளர்களுக்கு விளக்கிய கேள்வி , பதில் .. பாருங்கள் .
உஜ்ஜால் நிகாம் :- என்ன லஷ்கர்-இ-தொய்பா வில் பெண் தற்கொலை படை உள்ளனரா ?
டேவிட் :- எனக்கு தெரியாது ..
உஜ்ஜால் :- என்ன எதாவது தாக்குதல் தோல்வில் முடிந்ததா ?
டேவிட் :- ஆமாம் ஒரு முறை லக்வீ , முஸம்மீல் , நான் சந்திக்கும் போது ஒரு தாக்குதல் தோல்வில் முடிந்ததாக பேசிக்கொண்டனர் ...
உஜ்ஜால் :- யாரவது பெண் இருந்தார்களா ?
டேவிட் :- ஆம் இருந்ததாக கேள்விப்பட்டேன் ..
உஜ்ஜால் :- அவர்களின் பெயர்கள் நூர் ஜஹான் , இர்ஷத் , மும்தாஜ் இந்த பெயர் உடையவர்களா ?
டேவிட் :- ஆம் இரண்டாவது பெயருடைய பெண் என நினைகின்றேன் .
ABP Live டி.வி-யில் வந்த கேள்வி பதில்கள் ..
இதை வைத்து தான் இர்ஷத் ஜஹான் தீவிரவாத
கூட்டத்தை சேர்ந்தவர் தான் எனவும் நாங்கள் அவர்களை படுகொலை செய்தது நாட்டை காப்பாற்ற தான் என ஒப்பாறி வைக்கின்றனர் பி.ஜே.பி தலைவர்கள் ..
கூட்டத்தை சேர்ந்தவர் தான் எனவும் நாங்கள் அவர்களை படுகொலை செய்தது நாட்டை காப்பாற்ற தான் என ஒப்பாறி வைக்கின்றனர் பி.ஜே.பி தலைவர்கள் ..
இந்திய தேசிய லீக் கட்சிக்கு
ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் ..
ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் ..
1.மூன்று மாதங்களாக நீதிமன்ற காவலில் இருந்த இர்ஷத் ஜஹானிடம் முறையான விசாரனை இல்லாமல் குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்ததா ?
2.இந்தியாவின் பிரதமர் மோடி , பி.ஜே.பி. தலைவர் அமீத்ஷா ஆகியோர் தொடர்புடைய வழக்கை ஏன் ரகசியமாக நடத்த வேண்டும் .
3.விடியோ கான்பரன்ஸ் விசாரனையை மக்கள் பார்க்கும் படி ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு ஏன் செய்யவில்லை ?
4.டேவிட் ஹெட்லி குற்றவாளி என நிருபனம் ஆனால் அவரை ஏன் இந்தியாவிற்க்கு கொண்டு வரவில்லை ?
இப்படி டஜன் கேள்விகள் இந்திய தேசிய
லீக் கட்சிக்கு எழுகின்றது ..
லீக் கட்சிக்கு எழுகின்றது ..
பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு மோடி அரசு கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாமலும் எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் பி.ஜே.பி அரசு திணரி வருகின்றது என்பது குறிப்பிடதக்கது ..
நடுவன் மோடி அரசின் தடுமாற்றங்களை சரிகட்ட டேவிட் ஹெட்லி மூலம் ஆடிய சதுரங்க ஆட்டம் தான்
இர்ஷத் ஜஹான் தீவிரவாத கூட்டத்தை
சேர்ந்தவர் என்ற நாடகம் ..
இர்ஷத் ஜஹான் தீவிரவாத கூட்டத்தை
சேர்ந்தவர் என்ற நாடகம் ..
ஆட்சியாளர்கள் கையில் நீதி இருந்தால் சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்ற சொல் எப்படி சாத்தியமாகும் .
அனைவரும் சமம் என்ற சொல் எப்படி சாத்தியமாகும் .
டேவிட் ஹெட்லியிடம் மத்திய அரசு ரகசியமாக நடத்திய விடியோ கான்பரன்ஸிங்கை வெள்ளை அறிக்கையாக கருதி
மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.