தமிழ் ஹிந்து நாளேட்டில் இன்று 04.02.16ல் வெளியான செய்தியின் சுருக்கம்
ஹிந்துத்துவா அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிஸாத்தின் பெயர் என்ன?
திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”
என்ற கேள்விகளுடன்
வஹாபிஸ அச்சுறுத்தல்
இஸ்லாமிய ஆட்சி
இந்திய முஸ்லிம்களின் படையெடுப்பு
பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன
புனிதம் எனும் கொடுஞ்சொல்!
ஐ.எஸ் பயங்கரவாதம் என இறுதியாக
ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!
—-
என்று கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
பொதுவாக பத்திரிக்கை என்றாலே பரபரப்பு இருக்கத்தானே செய்யும்,அதுவும் முஸ்லிம்கள் ஒன்று கூடிவிட்டால் பதட்டமும் கலந்தே இருக்கும்.அதன் வெளிப்பாடுதான் தமிழ் இந்து பத்திர்க்கையின் பொய்ப் படலம்.
எப்படியும் முஸ்லிம்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டார்கள் .இனி கொஞ்ச காலத்தில் தர்கா காணாமல் போகிவிடும்.பிறகு கோவில் காணாமல் போகிவிடும் பிறகு கிருத்துவ தேவாலயங்கள் காணாமல் போகிவிடும் என்று இந்துத்துவாவை கலக்கத்தில் ஆள்த்தி எதிர்வரும் தேர்தலில் பாஜகவை முன்னுக்குக் கொண்டு வர அழகான யுத்தியே இந்த கட்டுரை என்பதை இக்கட்டுரைக்கு பதிலளிக்கும் முன் ஒரு தகவலை பதிவு செய்கிறோம்.
கட்டுரைக்கு மறுப்பு
இந்துத்துவாவை அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிஸத்தின் பெயர் என்ன எனக் கேள்விக்கணையுடன் துவங்கியுள்ளதாக அதற்கான விளக்கம்.
இந்துத்துவா அடிப்படைவாதமே அல்ல ! அது பயங்கரவாதம் !!
இந்து மதங்களில் பூர்வீகமாக சொல்லப்பட்ட ஒரு கடவுள் கொள்கையை கைவிட்ட பல கடவுள் கொள்கையைப் புகுத்தியவர்களே இந்துத்துவாவினர்.அந்தப் பல கடவுள் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறுகிறது இந்துத்துவா.
ஏகத்துவம் அடிப்படைவாதமே! ஆனால் பயங்கரவாதமல்ல?
அபதுல் வஹ்ஹாப் உடைய மகன் முஹம்மத் என்பவர் புதுப்பித்த ஓர் இறைப் பிரச்சாரத்திற்கே வஹ்ஹாபிஸம் என எதிரிகள் பெயர் சூட்டினர். இதுவே தவறு. ஓர் இறையை புதுப்பித்தவர் முஹம்மத் தான் அவர் தந்தை வஹ்ஹாப் அல்ல.முஹம்மதிஸம் என பெயரிட ஜீரனிக்காத சமாதி வணங்கிகள் முஹம்மதின் கொள்கையை அவரது தந்தைக்கு சேர்த்து விட்டனர்.அது வேறு கதை.
வஹ்ஹாபிஸம் என்று சொல்லப்பட்டு வரும் ஏகத்துவப் பிரச்சாரம் எந்த வகையில் பயங்கரவாதத்தைக் கையிலெடுத்துள்ளது என்பதை ஹிந்து நாளேடு சொல்லத்தவறியதும் சொல்லமுடியாமல் திணறியதையும் பார்க்கிறோம்.
வஹ்ஹாபிகள் இடித்த கோயில்
ஹிந்து நாளேடு கூற்றுப்படி தவ்ஹீத் வஹ்ஹாபிகள்
எத்தனை தர்காவை தகர்த்தார்கள் ?
எத்தனை கோயிலை இடித்தார்கள் ?
எத்தனை தேவாலயைத்தை உடைத்தார்கள் ?
பதில் சொல்வார்களா?
தர்கா , கோவில், சர்ச் இவற்றை உடைக்க நினைப்பவர்கள்
இரத்ததானம் செய்வதில் முதலிடம் பிடிக்க வேண்டிய அவசியமில்லையே!
மனிதநேயப்பணிகளில் மூழ்க வேண்டிய அவசியமில்லையே !
வெள்ள நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லையே !
எதற்குச் செய்தார்கள் ? ஆட்சிக்காகவா ? இறைவனின் அருளுக்காகவா ?
ஆட்சியைப் பிடிக்கவா ?
ஓர் இறை , ஓர் மறை என்று சொல்லி கடைசியில் ஓர் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற கூற்றுப்படி
தவ்ஹீத் காரர்கள் தேர்தலில் நின்றார்களா?
ஓட்டு கேட்டார்களா?
ஓட்டும் , சீட்டும் , நோட்டும் வேண்டாம் என்று கூறியதில் ஆட்சியை எப்படி பிடிக்கப்போகிறார்கள் என ஹிந்து நாளே கூறினால் சிறப்பாக இருக்கும்.
தமிழகத்தின் ISIS தவ்ஹீதா ?
இவர்கள் ஐஎஸ் ஐஎஸ் என்று விஷமத்தை கக்கிய நாளேடே
இந்த தவ்ஹீத் காரர்கள்
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது?
ஐஎஸ்.ஐஎஸை திட்டியது ?
அல்காயிதாவுக்கு எதிராகவும் தாலிபானுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தது எதற்கு என பதில் சொல்.
வஹ்ஹாபிகள் தீவிரவாதிகளே !
இந்து நாளேட்டுக்கு ஒன்றை சொல்கிறோம்.
உங்கள் ஆசை கோவில்கள் ,தேவாலயங்கள் , தர்காக்கள் ஆகியவை இடிக்கப்படக்கூடாது.கவலைப்படாதீர்கள் தமிழகத்தில் தவ்ஹீத் வஹ்ஹாபிகள் இருக்கும் காலம் வரை கோவில்களோ , சர்சுகளோ , தர்காக்களோ இடிக்கப்படாது.மாராக கோவில் இருக்கும் அங்கே வழிபாடு செய்ய ஆள் இருக்காது. தேவாலையம் இருக்கும் அதில் ஜெபித்த ஆள் இருக்காது. தர்காக்கள் இருக்கும் அதில் பூஜிக்க ஆள் இருக்காது.மதுக் கடைகள் இருக்கு அங்கே குடிக்க ஆள் வராது.சினிமாதியேட்டர்கள் இருக்கும் அங்கே படம் பார்க்க ஆள் இருக்காது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
வஹ்ஹாபிகள் மனமாற்றம் செய்வதிலும் மனிதநேயத்தை போதிப்பதிலும் மிகப்பெரிய தீவிரவாதிகளே.
ஹிந்துத்துவாவின் பயங்கரவாதம் !
இந்து மதங்களில் பூர்வீகமாக சொல்லப்பட்ட ஒரு கடவுள் கொள்கையை கைவிட்ட பல கடவுள் கொள்கையைப் புகுத்தியவர்களே இந்துத்துவாவினர்.அந்தப் பல கடவுள் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறுகிறது இந்துத்துவா.இதன் விளைவு என்ன என்பதை கிழ்க்கண்ட வீடியோக்கள் மூலம் தெரிவிக்கிறோம்.
காந்தியைக் கொன்ற ஹிந்துத்துவக் கொள்கை
ராமரை ஏமாற்றிய பிஜெபி
ஹிந்துத்துவா வைத்த குண்டும் BJPயின் சதி திட்டமும்
வெளிச்சத்துக்கு வந்த RSS BJPயின் கொடூர முகங்கள்
பத்திரிக்கை ஊடகமே ஒன்றைப் புரிந்துகொள் ! நீயும் பாஜகவும் நினைப்பதுபோல் உங்களுக்கு தலையாட்ட தவ்ஹீத் காரர்கள் ஒன்றும் ஷியா, சூபி போன்று கூமுட்டைகள் அல்ல.படைத்தவனுக்கு மட்டும் சிரம்பணியச்சொன்ன பகுத்தறிவுவாதிகள். இப்படிக்கு ரமஸ். [email protected]//