இளைஞர்களை கவரும் வகையில் மின்சார ஹார்லி டேவிட்சன் பைக்கை வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து வெளியிட உள்ளதாக க்ளோபல் டிமான்டின் மூத்த துணை தலைவர் சியன் கம்மிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹார்லி டேவிட்சன் பைக்கின் புதிய உருவமான Harley Livewire என்ற மின்சார பைக் இன்னும் 5 ஆண்டுகளில் மோட்டார் சந்தைக்கு வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் அடங்கிய பைகானது 74hp என்ஜினுடன் 4 விநாடிகளுக்குள் 0-100 கி.மீ./மணி வேகத்தை தொடும் அளவிற்கு வலிமையுடையது.
மேலும், பேட்டரியின் தொழில்நுட்பத்தை மாற்ற காத்திருப்பதாகவும் இதற்கேற்ற பெரிய பேட்டரியை அறிமுகப்படுத்தி பைக்கின் வடிவமைப்பை மாற்ற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய வாடிக்கையாளர்கள், நடுத்தர வயதினரை விட, இந்த மின்சார பைக் இளைஞர்களை அதிக அளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பைக்கின் கண்ணாடி மற்றும் இறுதி தோற்றம், என இன்னும் ஏதும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதற்கு மேலும் சில காலங்களாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நிச்சயம் இளைஞர்களை கவரவே முயற்சி செய்து வருவாதகவும் அந்நிறுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் தனது முதல் மின்சார பைக்கை உருவாக்க, முன்னதாக அமெரிக்க மோட்டார் நிறுவனம் உதவி செய்ய இருந்து, பின் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.