வியாழன், 22 செப்டம்பர், 2016

தமிழகத்தின் முற்போக்கு அமைப்புகள்,கட்சிகளின் தலைவர்கள்,மற்றும் செயல்வீரர்களுக்கு ஓர் வேண்டுகோள்…

தமிழகத்தின் முற்போக்கு அமைப்புகள்,கட்சிகளின் தலைவர்கள்,மற்றும் செயல்வீரர்களுக்கு ஓர் வேண்டுகோள்…
#நீயூஸ்7 தொலைக்காட்சியில் நேற்றைய முன் தினம் ராம்குமார் படுகொலை தொடர்பாக நடந்த நேரலையில் வழக்கறிஞர் தோழர் ராம்ராஜ் அவர்களும் தோழர் தீலிபன் மகேந்திரன் முன்னால் காவல்துறை அதிகாரி ஆகியோர் விவாதித்தார்கள். அந்த விவாதத்தில் ராம்குமார் படுகொலையில் இருக்கும் பின்னனி குறித்தும் அதில் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்களின் தொடர்பு குறித்தும் பேசப்பட்டது.
அந்த விவாதத்திற்கு பின் அந்த தொலைக்காட்சியின் நிலையத்திற்கு நேரிலும்,தொலைபேசியிலும் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளது. 
அந்த நிகழ்சியின் தொகுப்பாளர் நெல்சன் அவர்களின் தொலைபேசி மற்றும்செந்தில் தொலைபேசி எண்களை சமுகவளைதளங்களில் பரப்பி அவர்களை அவர்களை மிக இழிவாக பேசியும்,கடுமையாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள். எதிர்கருத்தை கருத்தால் வெல்ல இயலாத இந்த கோழைகள்…
ஊடக பயங்கரவாதம் என்று கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் காட்டும் பெரும் அக்கரை சரியான ஊடக நெறியை வெளிப்படுத்தும் போதும் அதற்கு ஆதரவாக நிற்கவேண்டிய கடமையும்,பொருப்பும் நமக்கு இருக்கிறது.
அவர்களுக்கு நேரடியாக நீயூஸ்7 தொலைக்காட்சி நிலையத்திற்கு போய் மிரட்டும் தைரியம் இருக்கும் போது சரியானதிற்காக நேரில் ஆதரவு தருவது நமது கடமையாகும்.
சரியானவைகளை தொடர்ந்து அந்த தொலைக்காட்சி எடுத்து செல்ல அது உதவும் கூட..
சன் நீயூஸ் தொலைக்காட்சியில் இருந்த ஒரு சிறந்த நெறியாளர் மேற்படி சக்திகளின் நெருக்கடியால் அந்த நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டார் ஒரு சில நாட்கள் உச் கொட்டிவிட்டு நாம் அடுத்தவேலைகளை பார்க்க நகர்ந்துவிட்டோம்.
தமிழ் ஊடகங்களில் சிறப்பான, நல்ல கருத்தியல் கொண்ட மதச்சார்பற்ற ஊடகவியலாளர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களை ஆதரிப்பதும்,பாதுகாப்பதும்தான் ஊடக நெறிகளை தொடர்ந்து மக்களுக்கானதாக மாற்ற இயலும்…
இத்தகைய ஊடக தோழர்கள் பலர் இருக்க சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவிற்கு ஊடகம் குறித்து பேச ரங்கராஜ் பாண்டேவை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் முன் நின்று நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத்தின் குறியீடாக ரங்கராஜ் பாண்டேதான் இவர்களின் கண்களுக்கு தெரிகிறது என்ற வருத்தத்துடன் இதை நாமும் கடந்து செல்கிறோம்.
தோழர்களே…
இயன்றவர்கள் நீயூஸ்7க்கு நேரில் சென்று ஆதரவு கொடுங்கள்…
இயலாதவர்கள் தொலைபேசியில் ஆதரவு கொடுங்கள்.
#நெல்சன்
#செந்தில் எண்களை இங்கே பதிகிறேன். அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது ஆதரவாக அனுப்புங்கள்.
நெல்சன். 98401 28529
செந்தில்.7708645377
நீயூஸ்7. 044 40300777
044 40777777
7708384077
இந்த செய்தியை அதிகமாக பகிரவேண்டுகிறேன். நன்றி.
தோழமையுடன்.
உமர்கயான்.சே.ஜெ.வழக்கறிஞர்.