லாரி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எல்.பி.ஜி லாரிகளும், பெட்ரோல்-டீசல் டேங்கர் லாரிகளும் இன்று முதல் இயங்காது என, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, வாகனப் பதிவுக்கான கட்டண உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து, கடந்த 30-ம் தேதி முதல் தென்மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தென் மாநிலங்கள் மற்றும் ஒடிசாவில் சுமார் 20 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும், லாரி உரிமையாளர்களுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
லாரிகளின் வேலைநிறுத்தத்தால் சரக்குகள் பெருமளவு தேக்கமடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி டேங்கர் லாரிகளும் இன்று முதல் போராட்டத்தில் பங்கேற்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரலாம் என கூறப்படுகிறது.