சனி, 27 மே, 2017

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ!

நம்மில் எத்தனைபேருக்கு இந்த பிரார்த்தனை தெரியும்?
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ!
இந்த து ஆவை காலையில் ஓதிவிட்டு அன்றே அவர் மரணித்தல் அவர் சொர்க்கவாசி!
நபிகளாரின் நற்செய்தி..
உரை : எம்.எஸ்.சையது இப்ராஹீம்
இந்த துஆவை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் யார் இதனை காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(நூல்: புகாரி 6306)
اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .
(அல்லாஹும்ம அன்த ரப்பீ . லாஇலாஹ இல்லா அன்த . கலக்தனீ . வஅன அப்துக . வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃது . அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது . அபூஉ லக பிநிஃமதிக அலய்ய . வஅபூஉ லக பிதன்பீ . ஃபக்ஃபிர்லீ . ஃபஇன்னஹு லா யக்பிருத் துனூப இல்லா அன்த.)
பொருள்:
அல்லாஹ்வே! நீயே எனது எஜமானன்! உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீயே என்னைப் படைத்தாய்! நான் உனது அடிமை. நான் என்னால் இயன்ற அளவுக்கு உனது உடன்படிக்கையின்படியும்,உனக்கு அளித்த வாக்குறுதியின்படியும் நடப்பேன்.
நான் செய்த பாவங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளோடும், நான் செய்த பாவங்களோடும் உன்னிடம் மீள்கின்றேன்..எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.