வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

மழைக்காலத்தில் பெண்களுக்கு ஜீன்ஸ் வேண்டாமே... சிறுநீர் தொற்று குறித்து எச்சரிக்கும் டாக்டர்கள்! August 04, 2017

​மழைக்காலத்தில் பெண்களுக்கு ஜீன்ஸ் வேண்டாமே... சிறுநீர் தொற்று குறித்து எச்சரிக்கும் டாக்டர்கள்!


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழைக்காலம் தொடங்கி விட்டது. மழைக்காலம் வந்தாலே கூடவே விதவிதமான தொற்று நோய்களும் வந்துவிடும். எல்லா வகையிலும் நாம் எச்சரிக்கையாகவும், கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் இது.

மழைக்காலத்தில் புறத்தொற்று நோய்கள் ஒருபக்கம் என்றால் சிறுநீர் கழித்தல், நம்முடைய உடை தேர்வு ஆகியவற்றின் மூலமும் நோய் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பாக, பெண்கள் மழைக்காலத்தில் ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களின் சிறுநீர் வெளியேற்று நாளம் ஆண்களைவிட சிறிது. இதனால், இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணியும் போது சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்கள்.

பொதுவாகவே நாம் ஜீன்ஸ் பேண்ட்களை அடிக்கடி துவைக்க மாட்டோம். மழைக்காலத்திலோ துணிகள் சீக்கிரம் காயாது. எனவே, இந்த மாதிரியான சூழலில் ஜீன்ஸ் பேண்ட்கள் அணிவது பெண்களின் இன உறுப்புகளில் எளிதில் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வயது வித்யாசம், மாதவிடாய் வித்யாசம் இல்லாமல் இந்த நோய்த்தொற்று எல்லா வயது பெண்களுக்கும் ஏற்படுகிறது என்பதால் பெண்கள் எச்சரிக்கையாக உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீர் தொற்றைத் தவிர்க்க அதிக நீர், பழங்கள், பருப்பு உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.