திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பன்றிக்கு பூனூல் போடும் போராட்டம்! August 07, 2017

பன்றிக்கு பூனூல் போடும் போராட்டம்!


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூனூல் போடும் போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆவணி அவிட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு பூனூல் மாற்றிக் கொள்வது வழக்கம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூனூல் போடும் போராட்டம் சமஸ்கிருத கல்லூரிக்கு அருகில் நடைபெறும் என அறிவித்திருந்தனர். 

தடையை மீறி அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், அந்த கல்லூரிக்கு செல்லும் சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.