திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..! August 07, 2017

​தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!


தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக  வந்தாவாசியில் 5 செ.மீட்டர் மழையும், மன்னார்குடி, திருப்பூரில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளன. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.