வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இறைச்சிக்காக பசு, ஒட்டகங்களை சந்தைகளில் விற்க உயர்நீதிமன்றம் அனுமதி! August 09, 2017


இறைச்சிக்காக பசு, ஒட்டகங்களை சந்தைகளில் விற்க உயர்நீதிமன்றம் அனுமதி!


மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இறைச்சிக்காக பசு, ஒட்டகங்களை சந்தைகளில் விற்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பசுக்கள், ஓட்டகங்களை இறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்தது. இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் கடந்த  மே 30-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்காலத் தடையை நீட்டித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 22ம் தெதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.