திண்டுக்கல் அருகே பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பணம் பறிப்பதற்காக, அவர் உயிருடன் இருப்பதாகக் கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை உள்ளியகோட்டை கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மனைவி ராணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரை, பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
அங்கு 4 நாள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், பணம் பறிப்பதற்காக, அவர் உயிருடன் இருப்பதாகக் கூறி, ராணியின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதாக நாடகம் நடத்தி உள்ளனர். அதன்பின்பு, உடலை ஒப்படைக்க மருத்துவர் பழனியப்பன், 80 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடமும், மருத்துவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.