வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கேரளாவை சீண்டியதால் கடும் நஷ்டத்தை சந்தித்த ரிபப்ளிக் தொலைக்காட்சி! August 10, 2017

கேரள மாநில மக்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் தாக்குதல்களால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அப் நீக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தாக்கப்பட்டார்கள் மேலும் சில தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதனால் கேரளாவில் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் டைம்ஸ் நவ் (TimesNow) தொலைக்காட்சியில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அர்னாப் கோஸ்சுவாமி தனியாக பிரிந்து ரிபப்ளிக் என்னும் தொலைக்காட்சியை ஆரம்பித்தார். 
அந்த தொலைக்காட்சியில் கேரளாவில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாகவும், அங்கு பாஜக மற்றும் சங்கபரிவார அமைப்புகளுக்கு எதிராக பல தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் செய்தி வெளியிட்டது. பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மௌனம் சாதிப்பதாகவும், சங்கப்பரிவார அமைப்புகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் விவாத நிகழ்ச்சிகளில் அர்னாப் கோஸ்சுவாமி கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் பொங்கியெழுந்த கேரள மக்கள் ரிபப்ளிக் (Republic) தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தையும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மொபைல் அப்பையும் மிகக் குறைவாக மதிப்பீடுகளை வழங்க ஆரம்பித்தனர். இதனால் ரிபப்ளிக் தொலக்காட்சியின் டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங் மிகவும் குறைய ஆரம்பித்தது. இதனால் அந்த தொலைக்காட்சியின் வருமானம் மிகவும் குறைய ஆரம்பித்தது. 

இதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி அப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எடுப்பது என ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த அப் நீக்கப்பட்டது. 

ரிபப்ளிக் அப்பை குறித்து கேரள இளைஞர்கள் மிகக் குறைவாக மதிப்பிட்டு கருத்துக்கள் (Review) தெரிவித்ததாலயே ரிபபளிக் நிறுவனம் இந்த முடிவை எடுத்தது எனபது குறிப்பிடத்தக்கது.