தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் கருப்பாக இருப்பதால் பலப் பிரச்சனைகளை சத்தித்துள்ளதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்களுள் ஒருவராக அபினவ் முகுந்த் உள்ளார். இவர் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 320 ரன்களை குவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சில தருணங்களில் இந்திய கிரிக்கெட் A அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினவ் முகுந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் 15 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். படிப்படியாக தான் இன்று இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன். மேலும் கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவிற்குள்ளும் வெளிநாடுகளுக்கும் பல முறை பயணம் செய்துள்ளேன். ஆனால் பிறர் எனது நிறத்தைக் குறித்து கொண்டுள்ள எண்ணம் மிகவும் வியப்பாக உள்ளது. அவர்கள் ஏன் என் நிறத்தைக் குறித்து கவலை கொள்கிறார்கள் என்றும் கருப்பாக இருப்பதற்காக எதற்காக விமர்சிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 15 வயது முதல் வெயிலில் கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், அதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வெப்பம் அதிகம் உள்ள சென்னை மாநகரத்தில் தான் பிறந்து வளர்ந்ததாக குறிப்பிட்டுள்ள அபினவ் முகுந்த், கருப்பாக இருப்பது குறித்து கவலை படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கருப்பாக இருப்பதால் அவரை பல பட்டப்பெயர்கள் வைத்து மற்றவர்கள் அழைப்பதாகவும் அது மனதை புண்படுத்தினாலும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அபினவ் முகுந்தின் இந்த ட்விட்டர் பதிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பல சமூக வலைதளவாசிகள் அபினவ் முகுந்திற்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் தருண் விஜய் தென் இந்தியர்கள் கருப்பானவர்கள் என்று கூறிய கருத்து பல சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அவருக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்ததால் அவர் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.